கட்டுரை 13:மனம் பார்த்துப் பேசுவோம்

மனம் பார்த்துப் பேசுவோம்

மெளலவி வி.எஸ்.முஹம்மது முஸம்மில் அல்புகாரி

ஒரு மனிதருக்கு அநீதம் இழைக்கப்படும்போது மனித உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அது குறித்து நாம் அதிக அக்கறை செலுத்துகின்றோம்.
அப்பாவி மக்களுக்கெதிராக வன்முறைகள் முடுக்கப்படுவதை உடனே தடுக்கக் கோரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிக நல்ல விஷயம்தான்

அது போல பிறர் மனம் வெதும்பி வேதனைப் படும் போது, அவமானத்தால் தலைகுனியும்போது, மனத்துயரத்தால் கண்ணிர் வடிக்கும் போது நமக்கு

அவர்கள் மீதான அக்கறை ஏற்படுவதில்லை.

பிறர் மனம் புண்படும்படி நடத்தல், பிறரை வார்த்தைகளால் புண்படுத்துதல், செயல்களால் நோவினை செய்தல் இவைகளெல்லாம் அவர்களுடைய

உரிமைகளின் மீதான தாக்குதல்தானே..! அவற்றை நாம் அசாதாரணமாகத் தட்டிப் பறித்து விடுகிறோம். பிற மனிதர்களுக்கு உடல் சேதம் ஏற்படும்போது,

பொருட்சேதம் ஏற்படும் போது பார்க்கப்படுகின்ற அதே கரிசணம் மனத்துயரதிற்கும் தரப்பட வேண்டும். அது என்றுமே நீங்காத வடுவாகி விடுகின்றன.

எப்போதுமே ஆறாத தழும்புகளாகி விடுகின்றன. பல வீடுகளில் குடும்பம் பிளவுபடக் காரணம், திருமணங்கள் விவகாரத்தில் முடிவதற்கான அடிப்படை ஏன்

பல தற்கொலைகளுக்கான தூண்டுகோல் நமது நாவுதான்.

நம்மைப் பேராபத்தில் வீழ்த்தி விடும் நாவைக் குறித்து நாம் என்றேனும் சிந்திதுள்ளோமா..? கடையில் ஒரு பொருளை வாங்குவதற்கு சிந்திகின்றோம்.

ஆடை எடுப்பதற்குப் பல மணி நேரம் செலவு செய்கிறோம்.ஆனால் பேசும் போது நிதானமிழந்து விடுகிறோம், வார்த்தைகள் ஏற்படுத்தும் வலி ரணமானது.

உள் மனதைக் கீரிக்கிழிக்கும். உளவியல் ரீதியாக ஒருவரது மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது சாது குணம் கொண்டவனையும்

கொலைகாரனாக்குவது நம் நாவிலிருந்து வரும் வார்த்தைகள்தாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். நாம் உபயோகிக்கும் வார்த்தைகள்ஒவ்வொன்றும்

பிறரால் கவனிக்கப்படுகின்றன என்பதை நாம் கவனித்துப் பேச வேண்டும். வார்த்தைகள் கண்ணாடிகளைப் போன்றது. அது உடைந்து விடுமானால் நாம்

மீண்டும் திருப்பிக்கொண்டு வர முடியாது.

மனித உரிமைகளுக்கான பிரகடனமாக இஸ்லாம் நாவடக்கத்தைச் சொல்கிறது. பேச்சில் அதிகம் கவனம் காக்கச் சொல்கிறது. இறைநம்பிக்கையாளர்

என்பவர் நாவாலும், கரத்தாலும் பிற இறைநம்பிக்கையாளருக்குப் பதுகாப்பளிப்பவர் ஆவார். ஒருவருடைய நாவாலும், கரத்தாலும் பிறருக்கு எந்த தீங்கும்

நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் இஸ்லாம் அக்கறை காட்டுகிறது.

நாவடக்கதைப் பேணுபவருக்கு நபிகள் (ஸல்) அவர்கள் சுவர்க்கத்தை நன்மாரயமாக அறிவிக்கின்றார்கள். “தன் நாவையும் ,வெட்கத்தலதையும் பாதுகாத்துக்

கொள்வதாக ஒருவர் பொறுபேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுபேற்றுக் கொள்கிறேன்.” என்று நபி(ஸல்)அவர்கள்

கூறுகின்றார்கள்.

Buy Ampicillin Online No Prescription style=”text-align: justify;”>ஆனால் நாம் பிறர் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்லை, நமது வார்த்தைகள் கூர் அம்புகளாகப் பிறரை வதைப்பதைக் குறித்து நாம் கவனம்

செலுத்துவதில்லை. செந்தமிழும் நாப்பழக்கம் என்பதைப்போல பிறரைக்காயப்படுத்தியே பழக்கப் பட்டவர்களுக்கு மாற்றத்திற்கான வழிமுறைகளை இஸ்லாம்

அழகுபடக் கூறுகிறது.

நபி (ஸல்)அவர்கள் மொழிந்தார்கள்: “யார் இறைவனையும், மறுமை நாளையும் நம்பிக்கைகொண்டாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும்

இல்லையெனில் அமைதி காக்கட்டும்.” நம்மால் பிறரைப் புண்படுத்தாமல் பேசத் தெரியவில்லையெனில், நமது நாவுகள் பிற மனங்களை கிழித்துக் கீறும்

கூர் கொண்டவையாக இருந்தால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிடுங்கள். மௌனம்தான் நமக்கான கேடயம். இங்கித வார்த்தைகளுக்கான முதல்

பயிற்சி, இதைத்தான் நபியவர்களும் வலியுறுத்துகின்றார்கள்.

இது ரமளான் மாதம். அமைதியின் மாதம். நாம் இந்த மாதத்தில் நோன்பிருந்து, மன ஓர்மையுடன் எதையும் அணுகுவதற்கேற்ப சூழ்நிலை உள்ள

பொழுதுகள் இப்போதுதான் நமக்குக் கிடைக்கும். நாம் நோன்பிருந்து நமது நாவிற்கு உணவின்றி, நீரின்றி பகல் முழுவதும் பயிற்சி கொடுப்பதைப் போன்று

பிறர் மனம் வாடா சொற்களை உபயோக்கிக் கற்றுகொடுப்போம். எல்லோரிடத்திலும் எடுத்தெறிந்து பேசுவதை விட மென்மையாகப் பேச முயற்சிப்போம்.

நாம் மரியாதையை செலுத்துபவர்களிடம், நமது அதிகாரிகளிடம், நமக்கு தேவை இருப்பவரிடம் எவ்வாறு பணிவன்போடு நாவாடுகின்றோமோ அது

போலவே நமது வீட்டில் உள்ளவரிடத்தில், நமது உறவினரிடத்தில், நண்பர்களிடத்தில், நம்மைச் சார்ந்தவர்களிடத்தில் பேசுவோம்.

வன்சொல் தவிர்த்து இன்சொல் மொழிந்து பிற மனங்களை கவர்வோம். நாம் ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்தளிப்போம் என்ற உறுதியோடு

நோன்பிருப்போம். நமது நாவுகள் இனிமேலும் மனம் பார்த்துப் பேசட்டும்.

Add Comment