கருவுக்குள் எனை வைத்து….கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்

e-m-haniffa-ymtk-function

இசை சாம்ராட் கிட்டப்பாவின் குருவான நாகூரில் கர்நாடக சங்கீதம் பயின்ற இசை ஜாம்பவான்கள் sma காதர் இசைமணி ma யூசுப் இவர்களின் பிரபல்யங்களை பின்னால் வந்த ஒருவர் தகர்த்து அந்த ஊரின் பெயரை தன் விலாசமாக்கி உலகெங்கும் முழங்கும் இசைத்தட்டுகளில் வியாபித்து நிற்பார் என யாராவது அந்தக் காலங்களில் சொல்லியிருந்தால் எளிதில் நம்பியிருக்க முடியாது…

கொஞ்ச காலம் இசை பாடல்களை அந்த ஊரில் நிகழும் எந்த நல்ல நிகழ்ச்சியிலும் பாடவேண்டி அழைக்கப்பட்டு சபையின் நடு நாயகமாக அமர்ந்து எந்த ஒரு கருவியின் துணையில்லாமலும் ஒரு குரல்கட்டுக்கான இலக்கணம் ஏழு எட்டையும் தாண்டி தனது குரலை உயர்த்தியும் அதே சமயம் அதன் வசீகரமான நெளிவு சுளிவுகளின் வழி கட்டுப்படுத்தி அமர்ந்திருக்கும் சபையோரை வசப்படுத்தி சப்பணமிட்டு

தொடையில் தட்டி தன்னை மறந்து பாடிய அந்தக்கால நாகூர் நகரத்தின் ஒரு இளைஞர்…

பாகவதர்களின் பாணியில் பின்கழுத்து வரை படிய வாரிய தலை முடியுடன் கூடிய கறுப்பு நிறமுள்ள ஒடிசலான தேகுள்ள வாலிபன்.

நாகூரின் திருமண வீடுகளிலும் பைத்து சபாக்களில் மட்டுமே முழங்கிய இவரின் பாடல்கள் கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வெற்றி வாகை சூடியதன் சூத்திரம் அவரது ஈடும் இணையுமில்லா வெண்கலக் குரலே தவிர வேறென்னவாக இருக்கமுடியும்….

EM HANIFA எனும் EMH நம் வாழ்நாளின் மிக உன்னத பங்களிப்புக்குரியவர்.. HMV வட்ட இசைப் பேழைகள் சுழலத் தொடங்குகையில் பாட்டின் தொடக்கத்திலேயே இசையை உணர்ந்து இன்ன பாடல் தான் பாடப் போகிறார் என இனம் கண்டு அவர் பாடுகையில் அவர் பின்னாலேயே பாடி மகிழ்ந்து வளர்ந்த இளமைக் காலங்கள் எங்களின் நினைவுப் புதையலில் இன்னமும் உண்டு….இவரது கச்சேரிக்காக வெளியூர்களுக் கெல்லாம் சென்று இரவு பகலாய் காத்திருந்து கேட்ட அனுபவம் உண்டு…

1984 85 எங்கள் பெரியாப்பா கலு.அ. அப்துல் மஜீத் சாஹிப் அவர்களின் மகனார் என் அண்ணன் கலு. அ. ஹாஜா நஸ்ருதீன் சில காலம் சிங்கப்பூரில் வேலை நிமித்தம் இருந்த போது ஸ்பீகர்களை கழட்டி மாட்டும் படியான ஒரு நேசனல் ஸ்டீரியோ டேப் ரிக்கார்டர் டெக் வாங்கி வந்தார். அது தான் நான் அனுபவித்த முதல் டேப் டெக்…
அதன் அள்ளி வழங்கும் மெல்லிசையில் Cialis No Prescription நான் சொக்கிப் போய்க் கிடப்பேன். அங்கு கைக்குட்டை பீஸ் தைக்கும் என் சகோதரிக்கு கைக்குட்டைகளை வெட்டிக் கொடுத்தும் மடித்தும் உதவும் சாக்கில் பாடல்களை கேட்க பழியாகக்கிடப்பேன்.

சிங்கப்பூர் S A மஜீத் பிரதர்ஸ் நிறுவனத்தாரின் மிக தெளிவான ஒலிப்பதிவில் நிறைய ஒலி நாடாக்கள் பொன்னிறத்தில் பெயர் அச்சிட்ட ஒட்டுவில்லைகளுடன் கூடிய அந்த நாடாக்கள் மூலம் மனதுக்குள் மையம் கொண்ட நாகூர் ஹனிபா எனும் இசைப் புயல் தான்….

இன்று வரை மனப்பாடமாகிப்போன அவர் பாடிய எத்தனையோ பாடல்கள்….

ஆஹா என்ன மாதிரியான பாடல்கள், என்ன ஒரு இசை ஆளுமை,
தொடங்குவார்…

கருவுக்குள் எனை வைத்து வஜீபனம் தந்து நீ
காப்பாற்றி இதுவரைக்கும்…

கண்பார்த்து வந்தெனக் குள்ளாயிருந்து நீ கவலையை வகுத்ததேனோ…..
மனம் முழுக்க கவலை மேகங்கள் சூழ வைத்து விட்டு தொடர்வார்…

எங்கும் நிறைந்த இறையோனே என் முகம் பாராததேன்…

அவர் பாடுகையில் தனது உடலைக் குறுக்கி நிமிர்ந்து இசையை வெளிபடுத்தும் மேனரிசம் கூட பிற பாடகர்களால் காப்பியடிக்க பட்டுவிட்டது… ஆயினும் ஹனிபா எனும் தனி ஒருத்தன் நின்று சமராடிய இஸ்லாமிய இன்னிசைப் பாடல்கள் எனும் அந்தக் களம் இன்னும் வேறு எந்த இசை வீரனையும் அதே வீரியத்துடனும் வெற்றிக் கொண்டாட்டத்துடனும் இதுவரைக் கண்டதில்லை.

கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்

Add Comment