காதரும் கண்ணிய இரவும்…

வட்டார வழக்கில் உள்ள பேச்சுகளோடு
ஒரு சிறுகதை எழுதலாம் என்ற எண்ணம் இருந்தது,அதற்கான ஒரு சிறிய முயற்ச்சிதான் இது,உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன…

காதரும் கண்ணிய இரவும்..

அடேய்,இங்கன காதர் பாய் கடை எங்கடே இருக்கு? என்று கேட்டால்
தெருவில் விளையாடும் சின்னப்புள்ள கூட கையை காட்டும்.காதர் பாய் கடையை,காதர் பாய் மளிகைக்கடை அவ்வளவு பிரபலம் அந்த ஏரியாவில்,

1985ஆம் ஆண்டுகளில் வறுமையின் காரணமாக,எல்லோரும்வெளிநாட்டுக்கு
படை எடுத்துக்கொண்டிருக்க,காதர் பாய்,அவ்வ வாப்பாவிடம் கண்ணீர் மல்க சொன்னார்.

வாப்பா,நான் சவுதிக்கு போகல,இங்கன
எங்கனாயாவது ஒரு கட வக்கிறேன்
விசாவுக்குள்ள பணம் இரண்டு லட்சத்த
எங்கட்ட தாங்க,என கண்ணீர் மல்க நின்றார்.

வியாபாரம் எல்லாம் சரிபட்டு வராதுப்பா
இன்னைக்கு நம்ம குடும்ப இருக்குற சூழ்நிலையில வெளிநாடு கிலிநாடு போய்,எதாவது நாலு துட்டு சம்பாதிச்சாதான்,நம்மளையும் இந்த ஊர்ல மதிப்பான்டே,வாப்பா அழுத்தமாக
சொன்னார்.

சாச்சா நீங்களாவது வாப்பட்ட சொல்லி
புரியவைங்கோ என காதர் பாய் மன்றாட,
அண்ணன் அவன் என்னமோ கடை வைக்கனும்னு சொல்றான்,நீ கொஞ்சம்
அவன் சொல்றத கேளமண்ணே,
அவனுக்குத்தான் சவுதிக்கு போக விரும்பம் இல்லைங்காறான்னே,
அங்க பெயிட்டு ஒரு மாசத்துல,இரண்டு மாசத்துல ஓடி வந்துட்டா என்ன செய்யா?இப்படி கடும் போராட்டங்களுக்கு பிறகு காதர் பாயின் வாப்பா சம்மதிக்க,அப்படி ஆரம்பித்த கடைதான் அது.

இன்னாரு உன் சேக்காளி எல்லாம்
வெளிநாட்டுக்கு போறாங்க,நீ இப்படி கட வைக்கபோறேன்னு ஒத்த கால்ல நின்னு நினச்சத சாதிச்சிட்டுடியடே என்ன கடை வைக்கபோற,இரும்பு கடை வை,கெட்டு போகாது,காலகாலத்துக்கு கிடக்கும்,கட சரியா போகாட்ட எப்படியாவது தள்ளிவுட்றலாம்,என பலவிதமாக யோசனை சொன்னார்கள்,அதை எல்லாம் காதர் இந்த காதில் வாங்கி
அந்த காதில் buy Doxycycline online விட்டுவிட்டார்.

காதர் பாய் தான் புடிச்ச புடியிலே மாறாமல் இருந்தார்.

அவரின் வீட்டில் இடதுபுறத்தில் ஒரு சிறிய இடம் ஒதுக்கபட்டு,புதிய பலசரக்கு கடை திறக்கபட்டது,காலையில சொந்தங்காரங்கள கூட்டி
பால்காய்ச்சி,பக்கத்து பள்ளிவாச அசரத்த கூட்டி வந்து பாத்தியா ஓதி
கற்கண்டு நேர்ச்சை எல்லோருக்கும்
விளம்பி,புதுக்கடய திறந்தாச்சு
ஆனாலும் யாரோ ஒருத்தர் சொல்ல
ஒரு மெளலூது ஓதினா
நல்லாயிருக்குமே,உடனே தடா புடான்னு ஏற்பாடு நடந்து “யா நபி ஸலாமலைக்கும்”என உரத்த குரலில்
அசரத்து தலமையில் நாலுபேரு சேர்ந்து மெளலூதும் ஓதி சிறப்பாக
கடை திறக்கபட்டது…

தொழுகை நேரம் வந்தால் கடையை பாதி மூடிவிட்டு தொழுகைக்கு போய்விடுவார்,ஜீம்மா தொழுகைக்கு ஓரு இரண்டுமணி நேரம் கடையடைப்பார்,
நோன்பு நேரங்களில் மஹ்ரிப் தொழுகைக்கு முன்னரே கடை யடைத்து விடுவார்,மிதமாக ஆரம்பித்த வியாபாரம் அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக செல்ல ஆரம்பித்தது,ஊரில் எல்லோரும் மெச்சினார்கள் எந்த வேலையாக இருந்தாலும் காதர் பாய்
தொழுகைய விட மாட்டுறாரே என்ற
மற்றவர்களின் பாராட்டில் காதர் பாய்
பூரிப்படைந்துதான் போனார்…

ஐந்து வருடத்தில் வியாபாரம் படு சூடானது,காதர் பாய்க்கு கல்யாண ஏற்பாடும் நடந்தது,அடே காதர்,தைக்கா தெரு லத்தீப் ப்பா மக சபுரா இருக்காள்ள,அந்த புள்ள எப்படி?அவ்வ
விரும்பி கேட்குறாகோ,நீங்க சரின்னு சொன்னா இன்ஷா அல்லாஹ் ஹஜ் பெருநாள் முடிஞ்சு கல்யாணம் எடுத்துறலாம்.என்ன சொல்றிய காதர் பாய் வாப்பாவிடம் சில பெரியவர்கள்
பேசிக்கொண்டிருந்தார்கள்.

காரியமெல்லாம் ஒழுங்கா கை கூடி வர,
கல்யாணமும் சிறப்பா நடந்தது,
மாப்பிள்ளை அழைப்பு,மறுஊடு அழைப்பு
என காதர் பாயால் பத்து நாள் கடைதிறக்க முடியவில்லை,அதற்கு பிறகு இனி கடையடைக்கவே கூடாது
என முடிவெடுத்து தினமும் கடையை தவறாமல் திறந்து வைத்திருந்தார்
இப்போது வியாபாரம் அனல் பறக்க,
அடுத்த தெருவில் ஒரு கடை ஒன்று
சொந்தமாக வாங்கி விரிவு படுத்தினார்
வேலைக்கு ஒரு பையனையும் வைத்துக்கொண்டார்..

இப்போதெல்லாம் முழுக்க முழுக்க
வியாபாரம்தான்,தொழுகையை மறந்துபோனது,என்ன பாய் தொழ வரலியா? இந்தா முன்னாடி போங்க
இகாமத் சொல்றதுகுகுள்ள வந்துடுறேன்,என்ன காதர் பாய் நோன்பு வைக்கலியா? வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு,நம்ம பார்க்குற வேலைக்கு எல்லாம் நோன்பு சரிவராது
காதர் பாய் பதில் சொன்னார்

மனைவி புள்ளங்கள கூட மறந்துவிட்டார்,மனைவி எத்தனையோ
முறை எடுத்து சொல்லியும் கூட
தொழுகைக்கு போறதே இல்ல
எப்போது பார்த்தாலும் வியாபாரம் தான்
வேண்டா வெறுப்பாக கடையடைப்தும்
ஜீம்மா நேரத்தில்தான்..

அது நோன்பு நேரம்,27 ஆம் கிழமை லைலத்துல் கத்ர் இரவு இன்னைக்காவது தொழப்போங்க, மனைவியின் குரலுக்கு இன்று செவி சாய்த்தார் காதர் பாய்,பெருநாள் வியாபாரம் படு ஜோராக போய்க்கொண்டிருந்தாலும்,27ஆம் கிழமை தொழப்போக மஹ்ரிப்போடு
கடையை அடைத்து வீட்டுக்கு வந்தார்
குளித்துமுடிச்சுட்டு பீரோவுக்குள் இருந்த வெள்ளக்கைலியையும்,வெள்ள
சட்டையும் போட்டுக்கொண்டு தொழுகைக்கு போக தயாராகினார்

அவர் மனைவி சொன்னார்கள்,
இன்னைக்கு லைலத்துல் கத்ர் இறங்கும் இரவு,திக்ரு சொல்லுங்கள்,அழுது பாவமன்னிப்பு கேளுங்கள்,அல்லாஹ் அருள் உங்க மேல இறங்கட்டும்,
எவ்வளவு நேரம்ஆனாலும் பரவாயில்ல
எல்லா முடிஞ்ச பிறகு வாங்க,அரகுறயா
ஓடி வந்துடாதீங்க என மனைவி சொல்ல காதர் பாய் பள்ளிவாசல் நோக்கி நடந்தார்.

மேல் முச்சு கீழ் முச்சு வாங்க திராவிய தொழுகையை முடிச்சு பள்ளிவாசலில்
ஒரு தூணில் சாய்ஞ்சு உட்கார்ந்தார்
பக்கதில் ஒருவர் என்ன காதர் பாய்
புதுசா இந்த பக்கம் என கேட்க? வெட்கத்தில் தலை குனிந்தார்.

அல்லாஹ் ரஹ்மத்தால நல்லாத்தான
இருக்கிய,நோன்பு திறக்க,இந்த மாதிரி திராவிய தொழுகை முடிஞ்ச உடனே
சாயா கொடுப்பாங்க,அத நீங்க எடுத்து
செய்யப்புடாதா என்ன? ஒருவரின் கேள்விக்கு,செய்வோம் இன்ஷா அல்லாஹ் என்றார்

இமாம் கதீஸ் முடிச்சு,திக்ரு சொல்ல
ஆரம்பிக்க,கரண்டு போய்விட்டது பள்ளியில்,காதர் பாய் சாய்ந்திருக்கும்
தூணுக்கு மேல உள்ள விளக்கிலும்
மற்ற விளக்குகளும் பொருத்தபட்டன
திக்ரு ஆரம்பம் ஆனது,காதர் பாய்வும்
இமாமை தொடர்ந்து திக்ரு சொல்கிறார்,அப்போது அவர் சாய்ந்திருக்கும் தூண் மேல் உள்ள விளக்கில் மண்ணெண்னெய் ஒரு சொட்டு கசிந்து காதர் பாயின் சட்டையில் விழுந்தது,அதை அவர் உணர்ந்தார்,சொட்டு சொட்டுடாக
அவர் சட்டையில் விழுந்து
கொண்டேயிருந்தது,அப்போதுதான் அவருக்கு அவர் மனைவி சொன்னது
ஞாபகம் வந்தது,லைலத்துல் கத்ர்
அன்று இறையருள் இறங்கும் என்பார்களே,அதுதான் இதுவோ?
நம் மீது இறையருள் இறங்கிவிட்டதே
என பூரிப்படைந்தார்,மிக ஆழமாக திக்ரு ஓத ஆரம்பித்துவிட்டார்.

தொழுகை முடிஞ்சு எல்லோருக்கும்
ஸலாம் சொல்லி வூட்டுக்கு போகும் போது மணி நடுஇரவைதாண்டியிருந்தது,
காதர் பாய் எதோ ஒரு புது உணர்வை உணர்ந்தார்,ஒரு மாற்றத்தை மன அமைதியை உணர்ந்தார்.

வூட்டுக்கு வந்தவுடன் மனைவியை அழைத்து,அலா இங்கபாத்தியா இன்னைக்கு நீ சொன்னமாதிரியே நடந்து போச்சு,லைலத்துல் கத்ர் ல அல்லாஹ் அருள் இறங்குச்சு என சொல்ல,மனைவிக்கோ கடும் ஆச்சரியம்..

சரி சரி நீங்க படுங்கோ நாளைக்கு
கடைக்கு போகனும்ல காலையிலே
கட துறக்கணும் என முடிக்கும் போதே
காதர் பாய் அமைதியாய் சொன்னார்
நாளைக்கு என்ன சஹருக்கு எழுப்புலா
நான் நோன்பு வைக்கபோறேன்!!

காதர் பாய் படுத்திருக்கும் போது பல சிந்தனைகள் வந்துபோயின,நான் ஏன்
தொழுகையை விட்டேன்,நான் ஏன் நோன்பை விட்டேன்,இத்தனை செல்வங்களும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல நான் ஏன் மறந்தேன்
ஆயிரம் கேள்விகள் அவருக்குள் வந்து
போனது,அவர் கண்கள் பாவமன்னிப்பு கேட்டு அழுதது,அப்படியே
தூங்கிப்போனார்..

சஹர் நேரத்தில் அனைவரும் எழுந்தார்கள்,சலீம் வாப்பவ எழுப்பு,வாப்பா நோன்பு வைக்கபோறாங்களாம்,காதர் பாயின் மனைவி சபுரா தன் மகனிடம் சொன்னாள்,காதர் பாயை எழுப்பினார்கள்,அவர் எழவில்லை,
அதற்கு பிறகு அவர் எழவேயில்லை

காதர் பாயின் வாபாத்து அறிவிப்புகள்
ஊரெங்கும் ஒலித்தது

நேற்று இரவு அவர் கடைசியாய் தொழுகை முடிந்து கழட்டி போட்ட சட்டையில் மண்ணெண்னய் சொட்டிய இடத்தில் கஸ்தூரி மணந்தது.

-அபூபக்கர் சித்திக்

Add Comment