ரமலான் நோன்பிருக்கும் திருமாவளவன்!

titu

இசுலாமியர்களோடு நேசமும் பாசமும் கொண்டவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். இதற்கேற்ப தனது கட்சியில் பெருவாரியான இசுலாமியர்களுக்கு பொறுப்புகளை வழங்கியிருக்கிறார்.

மேலும் வருடம்தோறும் இசுலாமியர்களின் புனித மாதமான ரமலானில் இசுலாமிய நண்பர்களோடு மூன்று நாட்கள் உண்ணாமல், பருகாமல் நோன்பும் மேற்கொண்டு வருகிறார். பத்தாவது ஆண்டாக இம்முறையும் மூன்றுநாட்கள் நோன்பினை அவர் நோற்க இருக்கிறார்.

நாளை (18ஆம் தேதி) இசுலாமிய உலமாக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்கட்சி தலைவர்களுடன் தனது நோன்பை துவக்குகிறார். ஹோட்டல் அபுபேலஸில் சஹர் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை நோன்பு திறப்பு நிகழ்வு சோழிங்கநல்லூர் கைலாஷ் ஹோட்டல் நடக்கிறது. 19ஆம் தேதி கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் விருந்தோம்பலில் புதுப்பேட்டையில் கட்சி நிர்வாகிகளுடன் சஹர் நிகழ்வும், அம்பத்தூர் ஹெ.பி.எம். பேரடைஸ் மஹாலில் திருவள்ளூர் மாவட்ட இசுலாமிய சனநாயகப் பேரவை நடத்தும் இப்தார் நிகழ்வும் நடக்கிறது.

Amoxil online justify;”>மூன்றாம் நாள் (20ஆம் தேதி) கட்சியின் பொருளாளர் முமுகமது யூசுப் இல்லத்தில் சஹர் நிகழ்வும், மாலையில் அபுபேலஸ் விடுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இஃப்தார் நிகழ்வும் நடக்கிறது.

இந்த இஃப்தார் நிகழ்வில் மனித நேய மக்கள் கட்சி தமீம்ன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவி, பாப்புலர் பிரண்ட் தலைவர் இஸ்மாயில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஷபீக்குர்ரஹ்மான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

Add Comment