மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்ய ஆதரவுப் படை… பரபரப்பான தொலைபேசி உரையாடல்!

Pro-Russian-fighters-at-MH17-crash-site-360_1

உக்ரைன்: ரஷ்ய ஆதரவுப் படையினர்தான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தாக்கி வீழ்த்தியுள்ளனர் என்று மீண்டும் கூறியுள்ள உக்ரைன், இதுதொடர்பான தொலைபேசி பேச்சு ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

சம்பவம் நடந்த பின்னர் ரஷ்ய ஆதரவுப் படையினருக்கிடையே நடந்த 3 தொலைபேசி பேச்சுக்களை அது இடைமறித்துக் கேட்டதாகவும் கூறியுள்ளது.

புரட்சிப் படை தளபதிக்கும், ரஷ்ய ராணுவத்தின் உளவுப் பிரிவு அதிகாரியும் ஒரு தொலைபேசி உரையாடலில் பேசியுள்ளனர். 2வது உரையாடல், இரண்டு புரட்சிப் படையினர் பேசிக் கொள்வது போல உள்ளது.

புரட்சிப் படையின் பெஸ் குழு இந்தத் தாக்குதலை ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையின் பெஸ் குழு செய்துள்ளதாக தெரிகிறது.

ரஷ்ய நாட்டு ஏவுகணை மூலம் ரஷ்ய நாட்டுத் தயாரிப்பு ஏவுகணை இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இகோர் பெஸ்லர் ரஷ்ய புரட்சிப் படையின் தலைவரான இகோர் பெஸ்லர் என்பவர், ரஷ்ய ராணுவத்தின் உளவுப் பிரிவு இயக்குநர் ஜெனரல் வசில் மைகோலோவிச் ஜெரனின் என்பவருடன் பேசுகிறார் ஒரு உரையாடலில். இந்தப் பேச்சு உள்ளூர் நேரப்படி மாலை 4.40 மணிக்கு, அதாவது விமானம் வீழ்த்தப்பட்ட பின்னர் நடந்துள்ளது.

விமானத்தை சுட்டு வீழ்த்தி Buy Levitra Online No Prescription விட்டோம் பெஸ் – நாங்கள் இப்போதுதான் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளோம். அந்த விமானம் எனகியோவாவுக்கு வெளியே விழுந்துள்ளது.

விமானிகள் எங்கே ஜெரனின் – சரி, விமானிகள் எங்கே.. விமானிகளுக்கு என்ன நடந்தது. அவர்கள் எங்கே உள்ளனர்…

தேடி வருகிறோம் பெஸ் – விமானத்தை நோக்கி தேடுதல் படையினர் சென்றுள்ளனர். படம் எடுத்தும் வருகின்றனர். பெரும் புகை வந்து கொண்டிருக்கிறது.

எப்போது நடந்தது ஜெரனின் – எப்போது நடந்தது இது… சரியாக நேரத்தைச் சொல்ல முடியுமா…. பெஸ் – அரை மணி நேரத்திற்கு முன்பு…

2வது உரையாடல் அடுத்து 2வது உரையாடல் வருகிறது. இதில் புரட்சிப் படையினர் இருவர் பேசிக் கொள்கிறார்கள். தாங்கள் சுட்டது பயணிகள் விமானம் என்று அவர்கள் கூறுகிறார்கள். விமானத்திற்கு அருகில் ஒருவர் இருக்கிறார். அங்கு நடந்ததை தொலைபேசியில் இன்னொருவரிடம் கூறுகிறார்.

சொல்லுங்கள் மேஜர் கிரெக் – சொல்லுங்கள் மேஜர்… மேஜர் – செர்னுகின்ஸ்க் தான் இதைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர். செர்னுகின் சோதனைச் சாவடியிலிருந்து இதைச் செய்துள்ளனர். இது செர்னுகினோவுக்கு அருகில் உள்ளது.

பீஸ் பீஸாகி விட்டது மேஜர் – விமானம் பல துண்டுகளாகச் சிதறி விட்டது. பெட்ரோபவலாஸ்கயா சுரங்கப் பகுதிக்கு அருகில் விமானம் விழுந்துள்ளது. 200 பேருக்கு மேல் இறந்துள்ளதாக தெரிகிறது. நாங்கள் உடல்களைப் பார்க்கிறோம். இது பயணிகள் விமானம்.

யாராவது இருக்கிறார்களா…. கிரெக் – அங்கு தற்போதைய நிலவரம் என்ன.. மேஜர் – 100 சதவீதம் இது பயணிகள் விமானம். உறுதியாக சொல்கிறேன். கிரெக் – ஆட்கள் நிறைய இருக்கிறார்களா… மேஜர் – விமான உதிரிகள் திறந்த வெளிகளில் விழுந்து கொண்டுள்ளன. கிரெக் – என்ன விமானம் அது…

உடல்கள் விழுகின்றன மேஜர் – நான் இன்னும் உறுதியாக பார்க்கவில்லை. அருகில் போக முடியவில்லை. விமானத்திற்கு சற்று அருகில் இருக்கிறேன். உடல்கள் வந்து விழுந்து கொண்டுள்ளன. சேர்கள், உடல்கள் உள்ளிட்டவை வந்து விழுகின்றன.

ஆயுதங்கள் உள்ளதா… கிரெக் – அங்கு ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா… மேஜர் – இல்லை. எல்லாமே பயணிகளின் உடமைகள்தான். மருத்துவ சாதனங்கள், துண்டுகள், டாய்லெட் பேப்பர்கள்தான் உள்ளன. கிரெக் – ஆவணங்கள் ஏதாவது உள்ளதா… மேஜர் – ஆம். இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு மாணவரின் உடமை உள்ளது. அவர் தாம்ப்சன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

3வது உரையாடல் அடுத்து 3வது உரையாடல் வருகிறது. இதில் கோசிட்சின் என்ற ராணுவ அதிகாரியும், ஒரு புரட்சிப் படை வீரரும் பேசியுள்ளனர்.

பெண்கள், குழந்தைகளின் உடல்கள் புரட்சிப் படை வீரர் – விமானம் ஸ்னோயே டோரஸ் அருகே வீழ்ந்துள்ளது. பயணிகள் விமானம். கிரபோவாவுக்கு அருகே விழுந்துள்ளது. எங்கு பார்த்தாலும் பெண்கள், குழந்தைகளின் உடல்களாக உள்ளன. அங்கு எமது வீரர்கள் விரைந்துள்ளனர். டிவியில் இது உக்ரைனின் ஏஎம் 26 ரக விமானம் என்கிறார்கள். ஆனால் விமானத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ் என்று எழுதப்பட்டுள்ளது. இவர்களுக்கு உக்ரைனில் என்ன வேலை…

உளவாளிகள் வந்திருக்கலாம் கோசிட்சின் – ஒரு வேளை உளவாளிகள் அதில் வந்திருக்கலாம். இங்கு ஏன் அவர்கள் வந்தார்கள். போர் நடக்கும் பகுதி என்று அவர்களுக்குத் தெரியாதா….

oneindia.in

Add Comment