ரயில்களில் திருநங்கைகள் தொல்லையை தடுக்க தனிப்படை ஆய்வு

Tamil_News_660560250283பயணிகளுக்கு திருநங்கைகள் தொல்லை கொடுப்பதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினரைக் கொண்ட தனிப்படையினர் தினமும் ரயிலில் ஆய்வு செய்கின்றனர். பிடிபடும் திருநங்கைகள் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் தனிப்படையினர் எச்சரித்துள்ளனர்.

ரயிலில் பயணிகளிடம் திருநங்கைகள் அடாவடியாக பணம் வசூலிப்பதாகவும், பணம் தர மறுக்கும் பயணிகளை ஆபாசமாக பேசுவதாகவும், சண்டை போடுவதாகவும் அடிக்கடி புகார்கள் எழுகின்றன. புகார் எழுந்த சில நாட்கள் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் ரயில்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். ரயில் பயணிகளுக்கு தொல்லை தரும் திருநங்கைகளை பிடிப்பார்கள்.

அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி விடுவார்கள். மீண்டும் ரயில் பயணிகளுக்கு தொல்லைகள் தொடரும். இந்தப்பிரச்னை தாம்பரம் மார்க்கத்தில் அதிகளவில் உள்ளது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

இதையடுத்து ரயில்வே போலீஸ் ஐஜி சீமா அகர்வால், தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி மோகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தாம்பரம் மார்க்கத்தில் செல்லும் ரயில்களில், பயணிகளுக்கு திருநங்கைகள் தொல்லை தருவதை தடுக்க இவர்கள் ரயிலில் பயணித்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். ஒருநாள் ரயில்வே போலீசாரைக் கொண்ட தனிப்படை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டால், அடுத்த நாள் ரயில்வே பாதுகாப்பு படையினரைக் கொண்ட தனிப்படை இந்தபணியில் ஈடுபடும். இது நேற்று தொடங்கியது.

ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 6 காவலர்கள், ஒரு பெண் காவலரைக் கொண்ட தனிப்படையினர் நேற்று தாம்பரம் மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளுக்கு தொல்லை தந்த 18 திருநங்கைகள் பிடிப்பட்டனர். அவர்களை எழும்பூர் ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். முதல்நாள் என்பதால் பிடிப்பட்ட திருநங்கைகளை எச்சரித்து அனுப்பினர். ஆனால், இனி வரும் நாட்களில் பயணிகளை மிரட்டும், கேலி, கிண்டல் செய்து தொல்லை தரும் திருநங்கைகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 384, 504 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்கள் உடனடியாக சிறையில் அடைக்கப்படுவார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் முறையே 3, 2 ஆண்டுகள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்Õ என்றும் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

அடிக்கவும் தயங்குவதில்லை

online pharmacy no prescription style=”text-align: justify;”>தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில்தான் திருநங்கைகள் தொல்லை அதிகமாக உள்ளன. சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்குள் நான்கைந்து முறை திருநங்கைகள் வந்து காசு கேட்பார்கள். மும்பை மார்க்கத்திலும் இதே நிலைமைதான். கொடுக்காவிட்டால் ஆபாசமாக பேசுவதுடன், அடிக்கவும் தயங்கமாட்டார்கள். சில திருநங்கைகள் போதையிலும் இருப்பார்கள். அதனால் இதனை தடுக்க ரயில்வே நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் மட்டும் நடவடிக்கை எடுதத்தால் போதாது. அதேபோல் பிடிபடும் திருநங்கைகளுக்கு உரிய மனநல ஆலோசனைகளை சொல்லி, பிழைப்பதற்கு வழியை ஏற்படுத்தி தருவதும் அவசியம்.

தினகரன்

Add Comment