கேரள அமைப்பின் சேவையும், சவூதி அரசின் கருணையும்.

1405972927936056900

Buy cheap Ampicillin justify;”>கேரள அமைப்பின் சேவையும், சவூதி அரசின் கருணையும்.

19 வருடங்களுக்கு முன் சவூதிக்கு அஸிஸ்டண்ட் பார்மசிஸ்ட் வேலைக்கு வந்த ஹைதராபாத் நகரைச் சார்ந்த அப்துல் அஜீஸ் என்பவர், 2000 ம் ஆண்டு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை பேமிலி விசாவில் அழைத்துக் வந்து ரியாத் நகருக்கு அழைத்துக் கொண்டுள்ளார். ஆனால் அதே வருடம் வேலையை விட்டு வெளியேறி சட்ட விரோதமாக தங்கி டிரைவர் மற்றும் வேறு வேலைகள் செய்து வந்துள்ளார். இகாமா புதுப்பிக்காமலும் அதன் பின் பிறந்த மேலும் நான்கு குழந்தைகளை பதிவு செய்யாமலும், குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பாமலும் 14 வருடங்களை ரியாத் நகரில் கழித்துள்ளார்.

நான்கு மாதங்களுக்கு முன் சோதனையின் போது அவர் பிடிபட்ட பிறகு தான், விபரம் வெளியே தெரிய வந்துள்ளது. அதன்பின் சட்டம், தங்குமிடம், பொருளாதாரம் போன்ற பல பிரச்சினைகள அவர்கள் சந்தித்த அவர்களுக்கு கேரளாவைச் சார்ந்த Non-Resident Keralites’ Affairs Department (NORKA) உதவி செய்து, இந்திய தூதரகம் மற்றும் சவூதி அரசாங்கத்திடம் முயற்சிகள் செய்து அவரது மனைவியும், ஆறு குழந்தைகளும் தாயகம் திரும்ப எற்பாடு செய்துள்ளார்கள்.

உதவி செய்த Non-Resident Keralites’ Affairs Department (NORKA) வையும், புனித ரமலான் மாதத்தின் கருணை அடிப்படையில் அவரது குடும்பம் தாயகம் திரும்ப விசா வழங்கியுள்ள சவூதி அரசாங்கமும் பாராட்டுக்குரியவர்கள்.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment