கடையநல்லூரில் வேலைவாய்ப்பு பெயர் பதிவு முகாம் நாளை துவக்கம்

நெல்லையில் வரும் 16ம் தேதி நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக செங்கோட்டை பகுதி மக்கள் நாளை (11ம் தேதி) கடையநல்லூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என செங்கோடடை நகராட்சி தலைவர் ரஹீம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி buy Doxycycline online உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை பாளை.,யில் நடக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இளைஞர்களும், பெண்களும் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி செங்கோட்டை, பிரானுர், வல்லம் மற்றும் எஸ் வளைவு பகுதி வரை உள்ள வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள இளைஞர்களும், பெண்களும் நாளை (11ம் தேதி) காலை முதல் 13ம் தேதி வரை கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment