ஸ்டிராஸ் நம்பிக்கை

எங்களுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியை, இந்திய அணியினர் லேசாக எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்,” என, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டிராஸ் வித்தியாசமான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்துக்கு எதிரான <உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, Cialis online திணறல் வெற்றி பெற்றது. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டிராஸ் கூறியது:
பொதுவாக சிறப்பான அணிகளுக்கு எதிராக விளையாடும் போது எங்களது ஆட்டத்திறன் அசத்தலாக இருக்கும். அடுத்து வரும் 27ம் தேதி, பெங்களூருவில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் மீது எங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வித்தியாசமான சூழ்நிலையில் போட்டியை எதிர்கொள்ளும் எங்கள் அணி, இந்தியாவை கட்டாயம் வீழ்த்துவோம். ஏனெனில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் நாங்கள் விளையாடியதை பார்த்து, இந்திய அணியினர் எங்களை எளிதாக எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
நெதர்லாந்து அணியின் டசாட்டேவை இதற்கு முன் “எசக்ஸ்’ கவுன்டி அணியில் பார்த்துள்ளேன். ஆனால் உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பாராட்டுக்குரியது. தவிர, பேட்டிங் “பவர்பிளே’யை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும், பேட்டிங் முழுவதும் எங்களது கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது. மற்றபடி போட்டியில் வெற்றி என்பது, எதிர்பார்த்ததை விட சற்று கடினமாகி விட்டது.
இவ்வாறு ஸ்டிராஸ் கூறினார்.

Add Comment