இஸ்லாமிய நோக்கில் வாழ்வின் நோக்கம்

இஸ்லாமிய நோக்கில்
வாழ்வின் நோக்கம்

-மெளலவி வி.எஸ்.முஹம்மது முஸம்மில் அல்புகாரி

நோக்கமற்ற வாழ்வு அர்த்தமற்றது. எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கம் இருக்கும். நாம் சாதாரணமாக தெருவில் செல்வதற்குக் கூட ஒரு நோக்கமிருக்கும். நாம் படைக்கப்பட்ட நோக்கம் என்ன? நாம் எதற்காக இந்த உலகிற்கு வந்தோம் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் ஏதோ வாழ்ந்தோம் மரணித்தோம் என்று நம் பொழுதுகள் கழியுமானால் நமது வாழ்க்கையில் எந்த ஒரு அர்த்தமும் இருக்காது. இறைவன் நம்மை மனிதனாகப் படைத்து நம்மைக் கண்ணியப்படுத்தி நமக்காக இந்த உலகத்தைப் படைத்து அதில் நமக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கினான். எதற்காகத் தெரியுமா?

இறைவன் மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை திருமறையில் கூறுகிறான் : இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்குர்ஆன் 51:56)

இறைவனை வணங்குவது என்றால் எவ்வாறு வணங்குவது? அதையும் அவனே கற்றுத் தந்துள்ளான். அவன் தினமும் ஐவேளைத் தொழுகையை நம் மீது
கடைமையக்கினான். ரமளான் மாதம் வந்து விட்டால் ஒரு மாத காலம் நோன்பிருக்க வேண்டும். ஆண்டுக்கொரு முறை ஜகாத் (ஏழை வரி)கொடுக்க வேண்டும் என்றும் வசதி படைத்தவர்கள் ஆயுளில் ஒரு முறை ஹஜ் யாத்திரை செல்ல வேண்டும் என்றும் கடைமையாக்கினான்.

இவை ஒரு இறை நம்பிக்கையாளன் கட்டாயம் செய்தாக வேண்டிய கடமைகளாகும். ஆனால் இஸ்லாம் இத்துடன் வணக்கத்தை முடித்துக் கொள்வதில்லை.
பள்ளிவாயில்களோடு கடைமைகளை நிறுத்திக் கொள்ளாது நமது வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு ஒவ்வொரு விஷயத்தையும் இறை வழிபாடாக, தர்மமாக வகுத்து தந்துள்ளது இஸ்லாம்.

நபி (ஸல்) அவர்கள் நமக்கு அத்தைகைய வாழ்வியல் நடைமுறைகளை சொல்லித் தந்துள்ளார்கள். சாலையில் கிடக்கும் தீங்கு தரும் பொருட்களை அகற்றுவது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி, நம்மையும் நாம் இருக்கும் இடத்தையும் தூய்மையாக வைத்துகொள்வது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி. பிற சகோதரனைப் பார்த்து புன்முறுவலிப்பது ஒரு தர்மம். பிரிந்து வாழும் கணவன் மனைவிடையே சுமூகத்தை ஏற்படுத்துவதும் தர்மம். அடுத்தவருக்கு உதவி செய்வதும் தர்மம். இன்னும் தர்மத்திலே சிறந்த தர்மமாக ஒருவர் தனது மனைவியிக்கு ஒரு கவளம் உணவளிப்பது என்றார்கள்.

ஒரு முறை நபியவர்கள் உங்களில் ஒருவர் தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதும் தர்மமே என்றார்கள். நபித் தோழர்களோ ”இறைத் தூதரே நாங்கள் எங்கள் இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக எங்களது மனைவியிடத்தில் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவதும் ஒரு தர்மமா? என ஆச்சர்யமகக் கேட்டார்கள்.நபியவர்கள் பதிலளித்தார்கள்: “ஒருவர் அவ்வாறு இறைவன் அனுமதித்த வழியில் தனது இச்சையை தீர்த்துக் கொள்ளாமல் இறைவன் தடை செய்த தவறான வழிகளில் ஈடுபடுவாரானால் அவருக்கு பாவம் எழுதப்படுமல்லவா.? என்றார்கள்.

இவ்வாறாக இறைவன் தவிர்ந்திருக்கச் சொன்ன விஷயங்களை தவிர்ந்திருப்பதும் அவனது கட்ட்டைளைகளுக்குக் கீழ்படிவதும் ஒரு இறை வணக்கமாக இஸ்லாம் கூறுகிறது. ஐவேளை தொழுது விட்டு நோன்பிருந்து விட்டு ஒருவர் மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்வாரானால் அவரது இறை வணக்கம் முழுமையடையாது. லஞ்சம் வாங்கிய பணத்தில், வட்டிப் பணத்தில், இறைவனால் தடை செய்யப்பட முறைகளில் வந்த பணத்தைக் கொண்டு ஒருவர் ஜகாத் கொடுப்பரானால் தர்மம் செய்வாரானால் ஹஜ் யாத்திரை செல்வாரானால் அதை இறைவன் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மட்டான். இறை வழிபாடுகளில் சரியாக இருந்து விட்டு பிற மனித உரிமைகளைப் பறித்தால் அவரும் உண்மையான இறைவணக்கம் புரிந்தவர் ஆக மாட்டார். பிற மனிதரின் மனம் புண்படும் படும்படி நடந்தால் பாதிக்கப்பட்ட நபர் அவரை மன்னிக்காத வரை இறைவனும் அவரை மன்னிப்பதில்லை.

இவ்வறாக இஸ்லாம் இறைவணக்கத்தை நாம் வாழும் வாழ்வினூடாக அமைத்துத் தந்துள்ளது. நமது வாழ்வின் நோக்கமாக, நீதியாக, நேர்மையாக, பிறருக்கு உதவியாக வாழ வேண்டும் என வலியுறுத்துகிறது. இறைவனை மட்டும் திருப்திப்படுத்தாது, நம்மோடு வாழ்பவர்களையும், நமக்காக வாழ்பவர்களையும் திருப்தியடையச் செய்வதில் தான் இறைப் பொருத்தம் உள்ளதென பறைசாற்றுகின்றது. இறை திருப்திக்கான இந்த Lasix No Prescription ரமளான் மாதத்தில் இறை திருப்தியில் இருந்து நம்மைத் தூரமாக்கும் விஷயங்களைத் தவிர்ந்திருந்து அவனது பொருத்தத்தைப் பெறுவோம் .இறைவன் நம்மை படைத்த நோக்கத்தை அறிந்து அதன் படி நாளும் நடப்போம்

Add Comment