வழங்கி வாழ்வோம்

வழங்கி வாழ்வோம்
-மெளலவி வி.எஸ்.முஹம்மது முஸம்மில் அல்புகாரி
உலகில் Buy Viagra Online No Prescription பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பணப் பற்றாக்குறை மனிதனை வாட்டி வதைக்கிறது. தன்மானத்தை அடகு வைத்து பிறரிடம் கையேந்திப் பிச்சை எடுக்கத் தூண்டுகிறது. ஒரு நாள் ஒரு வேளை வயிறு நிரம்ப உணவருந்த வாய்ப்பு கிட்டாதவர்களை, மானத்தை மறைக்க கிழியாத துணி ஒன்று கூட இல்லாதவர்களை நாம் தினமும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நாம் எங்கு திரும்பினாலும் யாசிப்பவர்கள். தலைமுறைகளைத் தாண்டியும் அவர்கள் யாசிக்கின்றார்கள். நம் தேசத்தில் யாசிப்பவர்களையும் ,ஏழைகளையும் ஒழித்து விடவே முடியாதா என்ற எண்ணம் எழுகின்றதா? நிச்சயம் நம்மால் முடியும். அதற்கு ஒரே வழி இஸ்லாம் காட்டித்  தந்த ஜகாத்தை நடைமுறைப் படுத்துவதுதான். இது வறுமையகற்ற வல்லோன் காட்டித் தந்த வழி. இறைவன் விதித்த கடைமைகள் தனி மனிதனுக்கும் ,சமுதாயத்திற்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.
ஜகாத் என்பது  வசதியுள்ளவர்கள் தங்களது செலவுக்குப்போக மீதமுள்ள தொகையில் ஆண்டுக்கொருமுறை தங்களுடைய செல்வத்திலிருந்து ஏழைகளுக்கு இரண்டரை சதவிகிதத்தை வழங்குவது ஆகும். இன்னும் 83 கிராமைத் தாண்டி நகை வைத்திருப்பவர்கள் மீதும் ஜகாத் கடைமையாகிறது. ஜகாத்தை இஸ்லாம் கட்டாயமாக்கியுள்ளது. தானதர்மம் கொடுப்பது அவரவர் விருப்பம் அனால் ஜகாத் கொடுப்பது அவரது விருப்பு வெறுப்புகளைத் தாண்டி அதை ஒரு கட்டாயக் கடமையக்கியுள்ளது இஸ்லாம்.
நமது செல்வத்தில் 2.5% நமக்குரியது அல்ல அது ஏழை எளிய மக்களின் பணம் என்கிறது இஸ்லாம். அச்செல்வம் அவர்களின் உரிமை எனத் திருமறை கூறுகிறது.: நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக! (அல்குர்ஆன்9:103) இந்த வேத வசனத்தைப் பாருங்கள். நபியிடம் எடுத்துக் கொள்ளும்படி கட்டளையிடுகின்றான்.
சரி ஆண்டுதோறும் நாங்கள் இவ்வாறு கொடுத்துக் கொண்டே இருந்தால் நாங்களும் ஒரு நாள் ஏழையாகி விடுவோமே, எங்கள் செல்வம் குறைந்துவிடுமே என அச்சப்படத் தேவையில்லை. 2.5% என்பது அவ்வளவு பெரிய தொகை அல்ல. உங்களிடத்தில் உங்கள் செலவுக்குப் போக மீதமாக  ஆயிரம் ரூபாய் இருக்குமானால் அதிலிருந்து நீங்கள் 25 ரூபாய் ஜகாத் கொடுத்தால் போதும். ஜகாத் கொடுப்பதால் இறைவன் நமக்கு அதிக செல்வதை வழங்குவதாகவும், நமது செல்வத்தில் அபிவிருத்தி செய்வதாகவும் வாக்களிக்கின்றான்.
மனிதர்களுடைய செல்வத்துடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும்) அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள். (அல்குர்ஆன்30:39)
ஜகாத் கொடுப்பது நமது செல்வத்திலுள்ள அழுக்கை அகற்றும். நமது பாவக்கறைகளைப் போக்கும். நம்மை ஈகைக் குணமுடையோராய் மாற்றும். இறை திருப்தியை பெற்றுத் தரும். ஒரு இறைநம்பிக்கையாளன் வசதியிருந்தும் இறைவன் கடைமையாக்கிய ஜகாத்தை கொடுக்கவில்லையெனில் அவர் இறை கட்டைளையை மீறிய பாவியாவார்.
இஸ்லாம் ஜகாத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் தெளிவு படுத்துகிறது. இறைவன் கூறுகின்றான்:
”(ஜகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.   (அல்குர்ஆன்9:60)
கட்டாயக் கடமையான ஜகாத் தவிர உபரியாக நாமாகச் செலவிடும் தர்மம் ஸதகா எனப்படும். அதையும் அல்குர்ஆன் பல இடங்களில் ஆர்வமூட்டுகிறது. இன்னும் ஜகாத்தை கொடுக்கும் போது நமது சொந்தங்கள், உறவினர்கள், அண்டை வீட்டினர் ஆகியோருக்கு நாம் முன்னுரிமை கொடுக்க இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது இரட்டிப்பான கூலியைப் பெற்றுத் தரும் என்று சுபச் செய்தி கூறுகிறது. இவ்வாறு நமது அருகில் வசிப்பவர்களின் துயரத்தை ஒவ்வொருவரும் துடைத்தால் வறுமை நிச்சயம் அகலும்.
இத்தைகைய தான தர்மங்களை  நாம் முறையாகப் பேணி கொடுத்து வந்தால் நமது நாட்டில் இனி பட்டினிச் சாவுகளே நிகழாது. நாளைய நம் தேசம் யாசிப்பவர்களற்ற பூமியாகத் திகழும். அனைவரும் ஒன்றாய் நன்றாய் உண்டு உடுத்தி மகிழ்வாய் வாழ இறைவன் வகுத்த இந்த சம பொருளாதாரத் திட்டம் வழி காட்டும். இந்த ஈகை மாதமான ரமளானில் இறை கடைமைகளை நிறைவேற்றியவர்களாக கொடுத்து மகிழும் ஈகைச் சமுதாயமாக வாழ்வோம்.

Add Comment