மறக்க முடியாத சதம்: டிசாட்டே

உலக கோப்பை தொடரில், முதன்முறையாக சதம் கடந்தது மறக்க முடியாத அனுபவம்,” என, நெதர்லாந்து “ஆல்-ரவுண்டர்’ ரியான் டென் டிசாட்டே தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. இப்போட்டியில் நெதர்லாந்து வீரர் ரியான் டென் Cialis online டிசாட்டே, 119 ரன்கள் எடுத்தார். இது உலக கோப்பை தொடரில் இவரது முதல் சதம்.
இதுகுறித்து டிசாட்டே கூறியதாவது: உலக கோப்பை தொடரில், முதல் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் வரும் 2015ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் “டாப்-10′ அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால், இது எனது கடைசி உலக கோப்பை தொடராக அமையலாம்.
தென் ஆப்ரிக்காவில் பிறந்த நான், அடுத்த உலக கோப்பை தொடரில், தென் ஆப்ரிக்க அணிக்காக விளையாடுவேன் என சிலர் கூறுகின்றனர். ஆனால் இது குறித்து இன்னும் யோசிக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக கவுன்டி போட்டியில் உலகின் தலைசிறந்த வீரர்களுடன் விளையாடினேன். இதேபோல வரும் ஏப்ரல்-மே மாதங்களில், ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாட உள்ளேன். இதுபோன்ற முக்கிய தொடர்களில் விளையாடுவதன்மூலம், எனது திறமையை உலகிற்கு வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன்.
இவ்வாறு டிசாட்டே கூறினார்.

Add Comment