நீதியை நையாண்டிச் செய்யும் தீர்ப்பு: கோத்ரா தீர்ப்புக் குறித்து பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் நீண்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு 63 பேரை குற்றமற்றவர்கள் என கூறியுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு Buy Viagra நீதிபீடத்தை நையாண்டிச் செய்வதாகும் என இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்பது வருடங்களாக ஒரு முறைக்கூட ஜாமீன் வழங்கப்படாமல் சிறையிலடைக்கப்பட்டிருந்த 63 நபர்களைத்தான் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்துள்ளது என அவர் தெரிவித்தார்.

சிறையிலடைக்கப்பட்ட இத்தனை நபர்களின் இழந்துபோன வருடங்களையும், அவர்களுடைய குடும்பம் இவ்வளவு காலம் அனுபவித்த துயரங்களுக்கும் பதிலாக எதனை கொடுக்கவியலும் என அவர் கேள்வி எழுப்பினார்.

மெளலவி உமர்ஜியைப் போன்ற வயோதிகரையும், ஏறக்குறைய கண்பார்வை இழந்த சிறுவனையும் இவ்வளவு காலம் எக்காரணமுமில்லாமல் சிறையிலடைத்த பிறகு தீர்ப்பு வெளியாகியுள்ள சூழலில் இந்தியாவின் நீதிபீடத்தின் கட்டமைப்பைக் குறித்து மறுபரிசீலனைச் செய்வது இன்றியமையாதது என சமூக நல ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் தெரிவித்துள்ளார்.

எதனடிப்படையில் கோத்ரா ரெயில் எரிப்பில் திட்டமிட்ட சதி என்ற சித்தாந்தத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்பதை புரிந்துக்கொள்ள இயலவில்லை என அவர் கேள்வியெழுப்பினார்.

தேஜஸ் மலையாள நாளிதழ்

Add Comment