வளைகுடா வாசி.

வளைகுடா வாசி.

அல்ஹம்துலில்லாஹ். பெருநாள் சிறப்பாக முடிந்து விட்டது. வெளி நாட்டினர்கள் பெருநாளைக்கு முந்தியே மணிஎக்ஸ்சேஞ் களில் இரவு 12 மணி வரை க்யூவில் காத்திருந்து ஊருக்கு பணம் அனுப்பியாகி விட்டது., அவர்களும் சந்தோசமாக பெருநாள் கொண்டாடியதாக போனில் பேசி சந்தோசம் சில்லறை வியாபாரக் கடைகளில் நல்ல வியாபாரம். பெரிய ஷாப்பிங் மால்களிலோ ப்ரீயாக கிடைப்பதைப் போல் க்யூவில் மக்கள் கூட்டம். ATM  மெஷின்களில் பணத்தை உருவுவதில் ஏகப்பட்ட கூட்டம். போன வருடம் பெருநாள் விடுமுறை 5 நாட்கள் தான். இந்த முறை வார விடுமுறை நாட்களும் முன்னும் பின்னும் சேரந்ததால் 9 நாட்கள் தொடர் விடுமுறை.

ஜூலை மாத சம்பளம் பெருநாளை முன்னிட்டு 10 நாட்கள் முன்னதாக வந்து விட்டது. நீண்டநாட்கள் லீவில் அத்தனையும் காலி. வரும் ஆகஸ்ட் 3 ந் தேதி அன்று காலியான மணி பர்ஸுடன் வேலைக்கு வரும் அன்று,  முதலில் ஞாபகத்திற்கு வருவது “ இன்னும் சம்பளத்திற்கு Buy Lasix Online No Prescription நிறைய நாட்கள் உள்ளதே” என்பதுவாகத்தான் இருக்கும்.

ஹோட்டல்களில் காசு கொடுத்து சாப்பிடுபவன் தான் பாவம். மற்றபடி  பெரும்பாலோர்க்கு கையில் காசு இல்லாவிட்டாலும் கவலை இல்லை. வகாலா கடைகளில் அக்கவுண்ட்டில் எவ்வளவு சாமான்கள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். நம்ம காகா தான். சிட்டையில் எழுதிக் கொள்வார். கிரடிட் கார்டு கூவி விற்கின்றார்கள். கார்டு இருந்தால் ஷாப்பிங் சென்டர்களில் 5000 ரியால் வரை தாராளமாக கடன் வாங்கிக் கொள்ளலாம். கடன் வாங்குவதாகவே தெரியாது. ஸ்டைலாக கார்டை இழுத்தால் போதும். காசு கொடுத்து வாங்குபவன் தான் ஏளனம். எப்படியும் ஓட்டி விடலாம். என்ன…. ஊருக்குத் தான் வரும் மாதம் பணம் அனுப்ப சிரமமாகும்.

முடிந்து விட்டதா ? எங்கே மூச்சு சரியாக விடுமுன் தான் அடுத்த பெருநாள் வந்து விடுமே. ஆடு என்ன விலையோ ? இப்போதே பணம் சரிக்கட்ட வேண்டும். கொஞ்சம் ஓவர் டைம் கிடைத்தால் நல்லா இருக்கும். வெகேசன் கொஞ்சம் லேட்டாக போகலாம்.

இது தான் முந்தைய தலைமுறை வளைகுடா வாசிகளின் நிலை. ஆயினும் இன்றைய தலைமுறை படித்து பட்டம் வாங்கி எல்லா துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கின்றார்கள். அவர்கள் சேமிப்பு விசயத்தில் அடுத்த தலை முறையினருக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்பதே நமது விருப்பம். அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்..

தி.ரஹ்மத்துல்லா

Add Comment