காஸாவில் ‘உறங்கும் பிஞ்சு குழந்தைகள்’ மீது தாக்குதல் நடத்துவது வெட்கக் கேடானது: பான் கி மூன் கண்டனம்

31-1406787837-unschool1-600

சான் ஜோஸ்: காஸாவில் அகதிகளாக பள்ளிக்கூடத்தில் தஞ்சமடைந்திருந்த பிஞ்சு குழந்தைகள் உறங்குவதையும் பொருட்படுத்தாமல் தாக்குதல் நடத்தியிருப்பது வெட்ககக் கேடானது என்று ஐ.நா. பொதுச்செயலர் பான்கி மூன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் 23 நாட்களாக வெறியாட்டம் போட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வரும் பள்ளிக்கூடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

Buy Doxycycline Online No Prescription style=”text-align: justify;”>ஆனால் அகதிகளாக தஞ்சமடைந்தோர் தங்கியிருக்கும் அந்த பள்ளிக் கூடங்களைக் கூட இஸ்ரேல் விட்டு வைக்காமல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த உச்சகட்ட வெறியாட்டம் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

பள்ளிக் கூடம் மீது தாக்குதல் இந்நிலையில் ஜபாலா பள்ளிக் கூடம் ஒன்றில் தங்கியிருந்த அகதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பான்கிமூன் கண்டனம் இந்த தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கி மூன், “இஸ்ரேலின்” பெயரைக் குறிப்பிடாமல் மிகக் கடுமையாக கண்டித்துள்ளார். கோஸ்டரிகோ நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பான்கி மூன் கூறியுள்ளதாவது:

வெட்கக் கேடானது வடக்கு காஸாவில் உறங்கும் பிஞ்சு குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவதை வெட்கக் கேடானது என்பதைத் தவிர வேறு எப்படியும் சொல்ல முடியாது.

நியாயப்படுத்த முடியாது மிகவும் வெட்கக் கேடானதும், நியாயப்படுத்த முடியாததுமான இந்த கொடூர தாக்குதலை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

நீதியின் முன்.. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு பான்கி மூன் கூறியுள்ளார்.

oneindia.in

Add Comment