ஐ.டி.ஐ., படித்தோருக்கு அபுதாபியில் வேலை: தமிழக அரசு அறிவிப்பு

ஐ.டி.ஐ., படித்து பணி முன் அனுபவம் உள்ளோர், அபுதாபி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு வெளிட்ட செய்திக்குறிப்பு:அபுதாபியில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு, ஐ.டி.ஐ., தேர்ச்சியுடன், ஆறு ஆண்டு பணி அனுபவம் உள்ள, ‘சட்டரிங் கார்பெண்டர்’ மற்றும் ‘ஸ்டீல் பிக்ஸ்சர்கள்’ மற்றும், 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்ற, ‘உதவி சட்டரிங் கார்பெண்டர்’, Buy cheap Ampicillin ‘உதவி ஸ்டீல் பிக்ஸ்சர்கள்’ தேவைப்படுகின்றனர்.தகுதி, அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம், மருத்துவ காப்புறுதி, மிகை நேர பணி ஊதியமும் வேலை அளிப்போரால் வழங்கப்படும்.விருப்பமும், தகுதியும் உள்ளோர் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் நகல்கள், நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ிண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை, ‘ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலகம், எண்.42, ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை 32 என்ற முகவரியில் உள்ள, தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்கள் அறிய, 044 2250 2267 என்ற எண்கள் மூலமாகவோ, www.omcmanpoweqõ.com என்ற இணையதளத்தில் அறியலாம்.இவ்வாறு, அரசு தெரிவித்துள்ளது.

Add Comment