”கோயில்களுக்கு பதிலாக சமையல் கூடங்களை கட்டுங்கள்”: குஜராத் முதல்வர் பேச்சு…

image (1)buy Lasix online height=”364″ />

”கோயில்களுக்கு பதிலாக சமையல் கூடங்களை கட்டுங்கள்”: குஜராத் முதல்வர் பேச்சு…

கோயில்கள் கட்டுவதற்கு பதிலாக, பள்ளி குழந்தைகளுக்கு உணவளிக்கும் வகையில் சமையல் கூடங்களை கட்டுங்கள் என்று குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் பதாஜ் கிராமத்தில், ”அக்ஷய பாத்திரம்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் 2 ஏக்கரில் ரூ.15 கோடி செலவில் பிரமாண்டமான சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய மதிய உணவு சமையல் கூடமான இதில் சுமார் 2 லட்சம் குழந்தைகளுக்கு 5 மணி நேரத்துக்குள் உணவு தயாரிக்க முடியும்.

இந்த கூடத்தில் தயாராகும் உணவுகள், சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு மதிய உணவு திட்டத்துக்காக அனுப்பப்பட உள்ளன. இந்த சமையல் கூடத்தை குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் நேற்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
நாம் மதிய உணவு திட்டத்தின் மூலமாக குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவை கொடுத்தால், வறுமை காரணமாக பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்துவதை தடுக்க முடியும்.

என்னைப் பொறுத்த அளவில் கோயில்களை கட்டுவதற்கு பதிலாக சமையல் கூடங்களை கட்டுங்கள். தனியார் பங்களிப்புடன் மாநிலத்தில் இதுபோன்ற சமையல் கூடங்கள் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தனியார் நிறுவனங்கள் உதவியுடன் பள்ளிகளில் டாய்லெட்கள் அமைக்கும் திட்டமும் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு ஆனந்திபென் படேல் பேசினார்.

Add Comment