இஃப்தார் புறக்கணிப்பு, ரம்ஜான் வாழ்த்து இல்லை ஏன்? பிரதமர் மோடி குறித்து எதிர்கட்சிகள் கேள்வி!

pm

கடந்த ரமலான் மாதத்தில் பிரதமர் மோடி ஏன் இஃப்தார் விருந்து அளிக்கவில்லை? ரம்ஜான் வாழ்த்து ஏன் தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் என்.பி எம்.பி. அதீர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி நோபாளம் சென்றிருந்தபோது அங்குள்ள பசுபதி buy Levitra online நாதர் கோயிலில் வழிபட்டார். அது ஆட்சேபனைக்குரியது அல்ல. ஆனால், நமது நாடு சுதந்திரம் பெற்றது முதல் பிரதமர்கள் அனைவரும் இஃப்தார் விருந்து அளிப்பது வழக்கமாக இருக்கிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கூட அதை தவறாமல் பின்பற்றினார். ஆனால், தற்போது என்ன நடக்கிறது?” என்றார். அதீர் ரஞ்சன் சவுத்ரியின் இந்த பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் பி.கே.பிஜு, எம்.பி.ராஜேஷ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ”பசுபதி நாதர் கோயிலில் சாமி கும்பிடத்தை பாராட்டுகிறோம். அதேநேரம், நமது நாட்டு இஸ்லாமியர்களின் உணர்வுகளையும் மதிக்கும் வகையில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்துள்ள வெங்கையா நாயுடு, ”நாங்கள் அனைத்து மதத்தினரையும் சமமாக மதிப்பவர்கள். ரம்ஜான் பண்டிகைக்காக பிரதமர் வாழ்த்து தெரிவித்து இருந்தார்” எனக் கூறினார்.

Add Comment