பள்ளி வாசலில் ஒலிபெருக்கி வைக்கக்கூடாது என்ற உத்தரவை ஏற்க முடியாது: பேராசிரியர் காதர்மொகிதீன்!

mus1

பள்ளி வாசலில் ஒலிபெருக்கி வைக்கக்கூடாது என்ற உத்தரவை ஏற்க முடியாது: பேராசிரியர் காதர்மொகிதீன்!

மசூதிகளில் பாங்கு சொல்வதற்கு சட்டரீதியான அனுமதி பெறாமல் ஒலிபெருக்கிகளை வைத்தால் அனுமதி வழங்க மாட்டோம் என்ற மும்பை, தில்லி நீதிமன்றங்களின் உத்தரவை ஏற்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே.ஏ.அமானுல்லாஹ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.சுக்கூர் வரவேற்றார்.

மாநிலத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது: தமிழகத்தில் உள்ள 32 வருவாய் மாவட்டங்களில், முஸ்லிம் லீக் கட்சியில் 42 மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது 52 மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகள் நியமிக்க முடிவு செய்துள்ளோம்.

அதேபோன்று 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தொகுதிச் அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம், கடலூர் வடக்கு மாவட்டம், கடலூர் தெற்கு மாவட்டம் என பிரிக்கப்படும்.

முஸ்லிம் பெண்களை குர்தா போடாதே எனக் கூறுவதை நாங்கள் அங்கீகரிக்க முடியாது. பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி மூலம் பாங்கு சொல்வதை அனுமதிக்க முடியாது என்பதை எங்களது கலாசாரப்படி எதிர்க்கிறோம். இதற்காக கட்சியை பலப்படுத்தி போராட தயாராவோம்.

தமிழகத்தில் 234 தொகுதிகளில், 38 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 25 சதவீதத்துக்கு மேலான முஸ்லிம்கள் வாழுகின்றனர். எனவே, மேற்கண்ட தொகுதிகளில் பூத் கமிட்டி அமைத்து பணியாற்ற வேண்டும். புதிய உறுப்பினர்களை buy Doxycycline online சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என காதர்மொகிதீன் தெரிவித்தார்.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் கே.எம்.அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், காயிதே மில்லத் பேரவை சர்வதேச செயலாளர் எம். அப்துல்ரஹ்மான், மாநில துணைத் தலைவர் ஷபிகுர்ரஹ்மான், மாவட்டப் பொருளாளர் டி.அப்துல் கப்பார்கான் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

Add Comment