சவூதியில் ஏமாற்றத்தில் சிக்கித் தவித்த தென்இந்தியர்கள்.

image001 (13)

சவூதியில் ஏமாற்றத்தில் சிக்கித் தவித்த தென்இந்தியர்கள்.

தென் இந்தியாவைச் சார்ந்த 13 தொழிலாளர்கள் 7,000 ரியால் பெறுமானமுள்ள தொகை எஜண்ட் கமிசனாக கொடுத்து ரியாத் வந்தனர். 800 Buy Ampicillin ரியால் சம்பளம், சாப்பாடு தங்குமிடம் இலவசம், காப்பி ஷாப்பில் வேலை என்று நம்பி வந்தவர்கள் இங்கு வந்ததும் தான் எமாற்றப் பட்டுள்ளதை அறிந்தார்கள்.

அவர்கள் வந்தது மேன் பவர் சப்ளை கம்பெனி. பல இடங்களில் வேலைக்கு அனுப்பப் பட்ட அவர்களுக்கு 6 மாதங்களாக சம்பளம் வழங்கப் படவில்லை. ஏமாற்றத்தில் சிக்கித் தவித்த இவர்களுக்கு Islamic Cultural Foundation (ICF) என்ற அமைப்பின் முயற்சியில் சவூதி ஏஜண்ட் சம்பள பாக்கியைத் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இந்திய ஏஜண்ட் இவர்களுக்கு தாயகம் திரும்பு வதற்கான விமான டிக்கட் வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment