சத்தீஷ்கர்:ஆதிவாசி சிறுமிகளை வன்புணர்வுச் செய்த போலீஸ்

மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள நியமிக்கப்பட்ட சிறப்பு போலீஸ்(எஸ்.பி.ஒ) அதிகாரிகள் சத்தீஷ்கரில் ஆதிவாசி சிறுமிகளை பாலியல் ரீதியாக சித்தரவதைச் செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

பாலியல் பலாத்காரத்திற்கு இரையான 14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 3 சிறுமிகள் சொந்த வீட்டிலிருந்து தப்பியதாக ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் தேதி கோஸி,ரெமி, ஹிட்மெ ஆகிய மூன்று சிறுமிகளை எஸ்.பி.ஒ அதிகாரிகள் வன்புணர்வுச் செய்துள்ளனர்.

போலீஸ் அதிகாரிகளின் காம வெறிக்கு இரையான 3 சிறுமிகளில் 2 பேர் உயிருக்கு பயந்து வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள ஒரு காட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

வன்புணர்வுக்கு ஆளான இன்னொரு சிறுமி தனது உறவினர் வீட்டில் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறார்.

“நாங்கள் வீட்டிற்கு செல்ல முடியாது. அவர்கள்(எஸ்.பி.ஒ அதிகாரிகள்) மீண்டும் எங்களைக் கண்டால் உடல்களை கண்டந்துண்டமாக வெட்டி புதைத்து விடுவோம் என மிரட்டியுள்ளார்கள்” என்று கூறுகிறார் பாதிப்பிற்குள்ளான Buy Doxycycline ரேமி என்ற சிறுமி.

மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த முக்ரத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி மாவோயிஸ்டுகள் 76 ஜவான்களை கொலைச் செய்தனர்.

முக்ரம் பஞ்சாயத்தின் சர்பஞ்ச் எயிம்லா நந்தா உள்ளிட்ட நான்கு பேரை துணை ராணுவப் படையினர் பிடித்துச்சென்ற மே மாதம் 29 ஆம் தேதி நாங்களும் தாக்குதலுக்குள்ளானோம் என பாதிப்பிற்குள்ளான ஹிட்மெ தெரிவிக்கிறார்.

“எங்களை எஸ்.பி.ஒ போலீஸ் அதிகாரிகள் வீட்டிலிருந்து பிடித்துச் சென்று சிந்தல்நரில் சி.ஆர்.பி.எஃப் முகாமிற்கு கொண்டு போயினர். அங்கு விவரிக்க முடியாத சித்திரவதைகளை நாங்கள் அனுபவிக்க நேர்ந்தது.இந்த சித்தரவதைகளைக் கண்ட ஒரு போலீஸ் அதிகாரி எங்களை தப்பிக்க வைத்தார்” என அவர் தெரிவிக்கிறார்.

ஆனால் பாலியல் பலாத்காரம் தொடர்பான செய்திகள் பாதுகாப்பு படையினரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தின் அடிப்படையிலானது என தண்டேவாடா போலீஸ் சூப்பிரண்டு ஒ.பி.பால் தெரிவிக்கிறார்.

இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Add Comment