கடையநல்லூரில் நடந்த கோர விபத்து 4 பேர் பலி!

kdnl-acc02

கடையநல்லூரில் நடந்த கோர விபத்து 4 பேர் பலி!

கடையநல்லூரில் இன்று நடந்த கோர விபத்தில் சம்பவ இடைத்திலேயே 4 பேர் பலியாகி உள்ளனர்.இதில் 3 நபர்கள் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடையநல்லூரில் கார்- லாரி பயங்கரமாக மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலியானார்கள். சென்னையில் இருந்து குற்றாலத்துக்கு குளிக்க வந்த போது விபத்து நடந்துள்ளது.

இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை மண்ணடி 81-வது புதிய தெருவைச் சேர்ந்தவர், அலி இப்ராகிம் (வயது 60). இவர் தனது குடும்பத்தினருடன் குற்றாலம் வருவதற்கு முடிவு செய்தார். அதற்காக மனைவி மற்றும் சென்னையில் உள்ள மூத்த மகள் நசீகா, அவருடைய 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஈரோட்டு நியூ பாரதிநகருக்கு வந்தார். அங்கு தன்னுடைய 2-வது மகள் சகஜத்நிஷா வீட்டில் தங்கினார்.

அங்கிருந்து அலி இப்ராகிம் உள்பட 7 பேர் காரில் நேற்று அதிகாலையில் குற்றாலத்துக்கு புறப்பட்டனர். காரை அலி இப்ராகிம் ஓட்டி வந்தார். முன் இருக்கையில் அவருடைய மனைவியும், பின் இருக்கைகளில் மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் இருந்தனர்.

மதியம் 12.30 மணி அளவில் கார் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் யூனியன் அலுவலகம் அருகில் வந்த போது, அலி இப்ராகிம் முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது எதிரே வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

காரை ஓட்டி வந்த அலி இப்ராகிம், அவருடைய மனைவி சாகுல் ஹமீமாவும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். பின் இருக்கைகளில் இருந்த அவருடைய மகள்கள் மற்றும் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் குற்றுயிராக கிடந்த அலி இப்ராகிமின் மகள்கள் மற்றும் 3 குழந்தைகளை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்களின் உடல்கள் காருக்குள் சிக்கி இருந்ததால், அதனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே கடப்பாரை கம்பி மூலம் காரின் கதவுகள் மற்றும் மேல் பகுதியை பெயர்த்து விட்டு உடல்களை மீட்டனர். கணவன்- மனைவி இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தைகள் முஸ்தாக், சாரத் ஆகியோர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர். பலியான முஸ்தாக்கும், சாரத்தும் நசீகாவின் குழந்தைகள் ஆவர்.

அலி இப்ராகிமின் மூத்த மகள் நசீகா, 2-வது மகள் சகஜத் நிஷா, அவருடைய 5 வயது மகன் முகமது ஆசிக் ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த விபத்து குறித்து கடையநல்லூர் Cialis No Prescription போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடையநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து சோள மூடைகளை ஏற்றிக் கொண்டு பெங்களூருக்கு புறப்பட்ட லாரியுடன் தான், கார் மோதி விபத்து நடந்து உள்ளது. இதில் லாரியின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. அலி இப்ராகிம் முந்திச்செல்ல முயன்றபோது முன்னால் சென்ற இன்னொரு கார் மீது உரசியதில் அந்த காரும் சேதம் அடைந்தது.

இது தொடர்பாக லாரி டிரைவர் நாமக்கல் மேல்தோமூரைச் சேர்ந்த நடேசன் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விபத்தினால் மதுரை- தென்காசி நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

kdnl-acc03

kdnl-acc01

Add Comment