கடையநல்லூரில் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டது.

விபத்தில் online pharmacy without prescription இறந்தவர்களின் ஜனாஸா சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டது.

14-08-14 அன்று கடையநல்லுரில் நடைபெற்ற கோர விபத்தில் இரண்டு குழந்தை உட்பட நான்குபேர் மரணமடைந்து, மூவர் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களின் உடல் 15-08-14 (இன்று) காலை கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு பிறகு, கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உடல்கள் முறையாக கபனிடபட்டு ஆம்புலன்ஸ் மூலமாக இறந்தவர்களின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சரக்குடிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

புகைப்படம் உதவி : குறிஞ்சி சுலைமான்

unnamed (39)

unnamed (38)

Add Comment