சென்னையில் எக்ஸ்ரே எடுக்கும் இடத்தில் பெண்ணை நிர்வாணப்படுத்திய மருத்துவமனை ஊழியர்.

001

சென்னை அண்ணாமலைபுரத்தில் தனியார் மருத்துவமனையில் பிலிப்பைன்ஸ் பெண்ணை எக்ஸ்ரே எடுக்க, அவரது ஆடைகளை கலைந்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவான்மியூரை சேர்ந்தவர் தர்மி மேக்வானா(40). பிரபல தனியார் ஓட்டலில் சமையல் நிபுணராக உள்ளார். இவரது மனைவி கினாய் மேக்வானா(35). இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மூன்று நாட்களுக்கு முன் பட்டினபாக்கம் எம்.ஆர்.சி. நகரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார். சிகிச்சை அளித்த டாக்டர் அவருக்கு உடனடியாக எக்ஸ்ரே எடுக்கசொல்லி கூறியிருக்கிறார். எக்ஸ்ரே எடுப்பதற்காக கினாய் மேக்வானா, எக்ஸ்ரே ரூமுக்கு சென்றுள்ளார்.

எக்ஸ்ரே பிரிவில் வேலை செய்யும் ஊழியர் கார்த்திக்கேயன்(26) என்பவர் கினாய் மேக்னாவிடம் மருத்துவர் அளித்த சீட்டை வாங்கினார். பின்னர், சிகிச்சைக்காக அவர் மட்டும் தனியாக வந்துள்ளதை அறிந்த கார்த்திகேயன், எக்ஸ்ரே அறையின் கதவை சாத்திவிட்டு கினாய் மேக்வானாவிடம் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் ஆடைகளை முழுமையாக கலைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதயத்துக்கு கீழ் உள்ள பகுதியை தானே எடுக்க வேண்டும் அதற்கு ஏன் முழுமையாக கலைய வேண்டும் என்று கேட்டுள்ளார் கினாய். இங்கு அப்படித்தான். அப்பத்தான் சரியாக எடுக்க முடியும் என்றவுடன் வேறு வழியில்லாமல் மருத்துவமனை ஊழியர் தானே என்று ஆடைகளை கலைந்து எக்ஸ்ரே எடுத்துள்ளார். எக்ஸ்ரே எடுத்து முடித்தவுடன் வெளியே வந்த கினாய் மேக்வானா அங்கு எக்ஸ்ரே எடுக்க வந்தவர்களிடமும் மருத்துவமனை ஊழியர்களிடமும் எக்ஸ்ரே எடுக்க வேண்டுமானால் எல்லா ஆடைகளையும் கலைய வேண்டுமா என்று கேட்டுள்ளார்.

இதை கேட்ட மற்றவர்கள் அப்படியெல்லாம் கிடையாதே யார் உங்களை அப்படி செய்தது என்று கேட்டுள்ளனர். இதை கேட்ட கினாய் மேக்வானா மருத்துவமனையிலேயே சத்தம் போட்டுள்ளார். கார்த்திகேயனுடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி மருத்துவமனை நிர்வாகம் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்ததன் பேரில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருவான்மியூர் சென்று கினாய் மேக்வானாவிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்து புகாரை வாங்கி வழக்கு பதிவு செய்து மருத்துவமனை ஊழியர் கார்த்திகேயனை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் சொந்த ஊர் வேலூர் ஆகும். சென்னையில் ரூம் எடுத்து தங்கியிருந்து Doxycycline No Prescription வேலை செய்து வருகிறார்.

Add Comment