துபாயில் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் பயன்படுத்திய பூச்சிகொல்லி ஏ.சி’யில் கலந்து 3 வயது சிறுமி மரணம்!

342_prop_5202303d96d8c

பக்கத்து Buy Bactrim வீட்டுக்காரர் வீட்டில் பயன்படுத்திய பூச்சிகொல்லி மருந்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 3வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் துபாயில் நடந்துள்ளது. துபாயின் குவாசியாஸ் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம்நடந்துள்ளது.

இந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் குடும்பத்தோடு தனது தாய் நாட்டுக்குகிளம்பி சென்றுள்ளார். அப்போது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை அடித்துவிட்டு கதவைபூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் மையப்படுத்தப்பட்ட ஏசி வசதி கொண்ட அந்த குடியிருப்பிலுள்ள பிறவீடுகளுக்கும், ஏசியின் மூலமாக விஷ புகை பரவிவிட்டது. இந்த சம்பவத்தில் 3 வயதுசிறுமி மற்றும் மேலும் ஆறுபேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன்காரணமாக, அவர்கள்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் மூன்று வயது சிறுமி பரிதாபமாகஉயிரிழந்தாள்.

தடை செய்யப்பட்ட அலுமினியம் பாஸ்பைட் மருந்தை வீட்டுக்குள் தெளித்ததால்தான் இந்த விபத்துநடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து வீடுகளுக்குள்அடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. குடோன்கள், தொழிற்சாலைகளில் மட்டுமே இதை பயன்படுத்தமுடியும். ஏசி மூலமாக விஷவாயு பரவிய சம்பவம் துபாயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Comment