கொடியை காத்த குமரன்கள் பிறந்த மண்ணில் மண்ணின் மைந்தர்கள் செய்யும் வேதனையான செயல் பாரீர்…

10547551_657077681027888_7447713319491282216_n

பம்மல் அரசு பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில், அ.தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் இளங்கோவன் அலைபேசியில் பேசியபடியே, தேசியக் கொடியை ஏற்றியது கண்டு, ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பம்மல், அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் தேசியக் கொடி ஏற்ற, அ.தி.மு.க.,வை சேர்ந்தவரும் வழக்கறிஞருமான, பம்மல் நகராட்சி தலைவர் இளங்கோவன் வருகைக்காக, பள்ளியில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் – ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள், பம்மல் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பெற்றோர் கூடி இருந்தனர்.காலை 9:௦௦ மணியளவில், தொண்டர்கள் புடைசூழ, அலைபேசியில் பேசியபடியே காரில் இருந்து இறங்கிய இளங்கோவன், நேராக வீறுநடைபோட்டு கொடிக்கம்பம் இருக்கும் இடத்திற்கு சென்றார்.அலைபேசியில் பேசுவதில் மட்டுமே முழுகவனத்தையும் செலுத்திக் கொண்டே வந்த இளங்கோவன், பள்ளி Buy Viagra நிர்வாகத்தின் வரவேற்பைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

”அவசரமாக செல்ல வேண்டி உள்ளது,” என, கூறிய இளங்கோவன், கையில் இருந்த அலைபேசியை, தோள்பட்டை இடுக்கில் சொருகியபடி, தலையை அடைகொடுத்து, அலைபேசியில் பேசியபடியே தேசியக் கொடியை ஏற்றினார்.அதன்பின், தோள்பட்டையில் வைத்திருந்த அலைபேசியை எடுத்து, கையில் வைத்தபடி பேசிக் கொண்டே காரில் ஏறிச் சென்றார்.நகராட்சி தலைவரின் இந்த அலட்சியமான செயல் கண்டு, பள்ளி வளாகத்தில் இருந்த அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.’நாட்டின் இறையாண்மையை, களங்கப்படுத்தமாட்டேன்’ என, பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட இந்த மக்கள் பிரதிநிதியின் செயல், நாட்டை, நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என, பார்வையாளர்கள் தலையில் அடித்துக் கொண்டு புலம்பினர்.

நன்றி. தினமலர்

Add Comment