இளைய சமுதாயமே

இன்றைய இளைய சமுதாயம் கெட்டுப் போவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம்.
நெட்,ஃபேஸ்புக்,சாட்டிங்,பலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் Buy cheap Viagra என்று
இளமையைத் தின்னக்கூடிய காரணிகள் ஏராளமாகவும் சுலபமாகவும் கிடைக்கும்
இந்த நேரத்தில் இந்த வயதின் ஆர்வக்கோளாறுகளை அறிவுரை சொல்லித் திருத்துவது
கொஞ்சம் சிரமம்தான்.

நாம் சொல்லும் அறிவுரை செயல்பட வேண்டுமென்றால் அவர்களின் ஆசை,
திறமை,இளமை சரியான இலக்கில் திருப்பி விடப்பட வேண்டும். அதுவும்
அவர்களின் விருப்பத்தோடு. இதற்கு நான் சொன்ன தீர்வு,

(அவர்களை எப்படியும் கணிணியை விட்டோ அல்லது இணையத்தை விட்டோ
திருப்ப இயலாது. ஆகையால்) அவர்களை ப்ளாக்கர்களாக மாற்றுங்கள் :).

அடுத்த பதிவுக்கு என்னடா செய்யலாம், எங்கேர்ந்து தேத்தலாம் என்ற சிந்தனையில்
நாலு பதிவுகளை படிக்க நேரிடும். புதிய பதிவர்களுக்கான‌ போட்டிகள் அவ்வப்போது
திரட்டிகளால் நடத்தப் பட வேண்டும்.

Idle mind is devil’s workshop.

எனவே சும்மாயிருக்காமல் நல்ல விஷயங்களில் பிசியா இருக்கணும்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________**********______________________

‘ஆற்றலை அழிக்க முடியாது ஆனால் வேறெரு ஆற்றலாக மாற்றலாம்’.

‘செய்ய வேண்டியதைச் செய்யலன்னா செய்யக் கூடாததையெல்லாம் செய்ய
வேண்டி வரும்’ ; எங்கே செலவழிக்கணுமோ அங்கே செலவழிக்கன்னா
செலவழிக்கக் கூடாத இடங்களிலெல்லாம் செலவழிக்க வேண்டி வரும்’.

_________________________**********______________________

ஆதலினால் ஒரு பழக்கத்தைத் தவிர்க்க வேறு ஒரு நல்ல மாற்றுப் பழக்கத்தைத்
தேர்ந்தெடுங்கள். மிகச்சிறந்த மாற்றைக் கண்டு பிடியுங்கள் அது கிடைக்காத
பட்சத்தில் அதை விடக் குறைவான ஆபத்தைத் தேர்ந்தெடுங்கள்.

சிகரெட்டுக்கு மாற்று சுவிங்கமா,வெற்றிலையா இல்லை வேறேதுமா ?

குடிப்பழக்கத்திற்கு மாற்று கோக்கா,தேநீர் காப்பியா இல்லை வேறேதுமா ?

விபசாரம்,சுய இன்பத்திற்கு மாற்று நிச்சயம் திருமணம்தான்.

திருமணத்தைக் கஷ்டமாக்கி வைத்திருப்பதால்தான் விபசாரம் மலிவாகிப் போனது.
அதிலும் விபசாரத் தொழில் செய்பவர்கள் ‘ரெண்டு ஜான் வயித்துக்காக‌,
பெத்த பிள்ளைக்காக, ஆதரவற்ற நிலைமைக்காக’ என்று சொல்லி அனுதாபம்
தேடிப் பெற்று இழிநிலை என்று தெரிந்தும் அதனைத் தொடர்கிறார்கள். இதையே
திருடனும் கொள்ளையடிப்பவனும் இன்னும் எல்லாத் தவறுகள் செய்பவர்களும்
தன்னை நியாயப்படுத்திக் கொண்டால் என்ன செய்வது.

_________________________**********______________________

எது எப்படியோ, மனிதனைப் பற்றிய முழுமையான அறிவு அவனைப்
படைத்தவனுக்குத்தான் தெரியும். இறைவன் திருமறையில் கூறுவது,

‘சத்தியம் வந்தது இன்னும் அசத்தியம் அழிந்தது’
(ஜாஅல் ஹக் வ zahaqqal பாத்தில்)

‘நிச்சயமாக நன்மை(யான காரியங்)கள் தீமைகளைப் போக்கிவிடும்’
(இன்னல் ஹஸனாத் யுத்ஹிப்னஸ் ஸய்யிஆத்).
.
.
.
ஆதலினால் (நன்மைகளைக்) காதல் செய்வீர் 🙂

வஸ்ஸலாம்.

Add Comment