வாட்ஸ்ஆப்-க்கு ‘ஆப்பு’ வைத்த டெலிகிராம்

gallerye_084630891_1052765

டெலிகிராம் மென்பொருள் 2013 அக்டோபரில் வெளியிடப்பட்து. அப்போது ஒரு நாளைக்கு 1 லட்சம் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தினர். பின் அபார வளர்ச்சி பெற்று இந்த ஆண்டு மார்ச்சில் 1.5 கோடி பேரைத் தொட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்- பை விட இதில் அதிக வசதிகள் உள்ளன. பாதுகாப்பு வசதிகளும் அதிகம். வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல் ஆண்டு மட்டுமே இலவசம். அதற்குப் பிறகு இதைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் டெலிகிராம் மென்பொருள் எப்போதும் இலவசம்.

வாட்ஸ்ஆப்-ல், ஒரு குரூப்பில் 50 நபர்களுக்கு மட்டுமே செய்தி அனுப்ப முடியும். ஆனால் டெலிகிராமில் 200 பேருக்கு குரூப் மூலம் செய்திகள் அனுப்பிக்கொள்ளலாம்.

வாட்ஸ் ஆப்-ல் வீடியோ, ஆடியோ, போட்டோஸ் ஆகியவற்றை மட்டும்தான் அனுப்பமுடியும். டெலிகிராமில் எல்லா விதமான பைல்களையும் அனுப்பலாம்.

வாட்ஸ்ஆப் மென்பொருளை மொபைல் போன்களை தவிர கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியாது. டெலிகிராம் மென்பொருளை மொபைல், டேப்லெட்கள் மற்றும் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயங்குதளங்களில் நேரடியாக பயன்படுத்தலாம்.

வாட்ஸ்ஆப்-ல் buy Cialis online பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. டெலிகிராம் மென்பொருளில் போட்டோக்களை உங்கள் சம்மதம் இல்லாமல் யாரும் பார்க்கமுடியாது. மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அளித்துள்ளனர்.

வாட்ஸ்ஆப் மென்பொருள் ஆங்கில மொழியில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் மென்பொருளில் ஆங்கிலம், ஸ்பானிஸ், அரபிக், ஜெர்மன், இத்தாலியன், டச்சு, போர்ச்சுகீசு ஆகிய மொழிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதை டவுன்லோட் செய்வதற்கு கீழ் உள்ள இணையதளத்திற்கு செல்லுங்கள்:
android – https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger
iphone/ipad – https://itunes.apple.com/us/app/telegram-hd/id898228810
windows mobiles – http://www.windowsphone.com/en-us/store/app/telegram-messenger-beta/945b96a7-aadc-4dd0-806a-c2d1e0e6ca9a

Add Comment