ஏன் சிலருக்கு மட்டும் வாய்ப்புக்கள் தொடர்ந்து கிடைக்கிறது சிலருக்கு கிடைப்பதே இல்லை.

Bad-Luck-Good-Luck700

 

ஏன் சிலருக்கு மட்டும் வாய்ப்புக்கள் தொடர்ந்து கிடைக்கிறது சிலருக்கு கிடைப்பதே இல்லை.

வாய்ப்புக்கள் தொடர்ந்து கிடைக்கிறது என்று நம்புபவர்களும், வாய்ப்பே கிடைப்பதில்லை என்று ஆதங்கப் படுபவர்களும் தன்னைச் சந்திக்கும் படி ஒரு ஆராய்ச்சியளர் பிரபல பத்திரிக்கையில் விளம்பரம் செய்கின்றார். நூற்றுக் கணக்கானோர் அந்த ஆராய்ச்சியளரைச் சந்திக்கின்றனர். அவர்களது எல்லா நடைமுறைகளையும் பார்த்து, கேட்டு ஆராய்கின்றார். ஆராய்ச்சியின் முடிவில் வாய்ப்புக்கள் தொடர்ந்து கிடைப்பதும், வாய்ப்பே கிடைக்காமல் போவதும் அதிர்ஷ்டம் என்ற ஒரு மாயையால் அல்ல, அந்தந்த நபர்களின் சிந்தனையும், நடைமுறையுமே அதற்குக காரணம் என்று கூறுகின்றார்.

ஒரு உதாரணத்திற்கு அவர்களை சோதிப்பதற்காக அவர் எல்லோரிடமும் ஒரு செய்திப் பத்திரிக்கையைக் கொடுத்து அதில் எத்தனை பகைப்படங்கள் உள்ளன என்று கண்டு பிடிக்கச் சொல்கின்றார். அதே சமயம் அதே பத்திரிக்கையில் மிகப் பெரிய கொட்டை எழுத்துக்களில் பத்திரிக்கையை திறந்த உடன் தெரியும் அளவில் “ இந்த விளம்பரத்தைப் பார்த்ததாக கூறுபவர்களுக்கு 50 டாலர் தரப்படும்” என்று மற்றொரு விளம்பரம் கொடுக்கினறார். அதிர்ஷ்டம் இல்லை என்று கூறியவரகள் பரபரப்பானவர்கள் ஆதலால் அந்த கொட்டை எழுத்து விளம்பரத்தைக் கவனிக்கவே இல்லை. தவற விட்டு விட்டார்கள். அதிர்ஷ்டக் காரர்கள் என்று நம்பியவர்களிடம் நிதானம் காணப்பட்டதால் அவர்களுக்கு பத்திரிக்கையை திறந்தவுடன் அந்த கொட்டை எழுத்து விளம்பரம் தான் கண்ணில் பட்டது. 50 டாலர் வென்றார்கள்.

அதிர்ஷ்டம் இல்லை என்று கூறுபவர்கள் கண்ணோட்டம் குறிப்பிட்ட சில விசயங்களின் மீது மட்டுமே உள்ளதால் மற்ற விசயங்களை அவர்கள் தவற விட்டு விடுகின்றார்கள். குறிப்பிட்ட சில நண்பர்களை மட்டுமே நோக்குவதால் மற்றும் சில நல்ல நண்பர்கள் Buy cheap Viagra கிடைக்கும் வாய்ப்பை இழந்து விடுகின்றார்கள்.

ஆனால் அதிர்ஷ்டக் காரர்கள் என்று நம்பியவர்கள் நிதானமாக குறிப்பிட்ட ஒன்றின் மீது மட்டும் கவனம் செலுத்தாமல் எங்கு சென்றாலும் அங்கு என்னவெல்லாம் உள்ளது என்பதைக் கவனிக்கின்றார்கள். கிடைக்கும் வாய்ப்புக்களை ஆராய்ந்து தேவையானவைகளை பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

உங்கள் பக்கமும் அதிர்ஷ்டக் காற்று வீச வேண்டுமா, இதோ நான்கு வழிகள்.

1. உங்களது மனம் சொல்வதைக் கேளுங்கள். பல சமயங்களில் அது சரியாகவே இருக்கும்.

2. வழக்கமான முறைகளை மாற்றி புதிய முறையில் செய்து பழகுங்கள்.

3. தினமும் தவறாமல் அன்றைய தினம் நல்ல முறையில் நடந்தவைகளை நினைத்துப் பாருங்கள்.

4. யாரையும் சந்திக்குமுன் அல்லது யாருடனும் பேசும் முன் உங்களை ஒரு அதிர்ஷ்டக்காரராக எண்ணிக் கொள்ளுங்கள்.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment