தினமும் விழித்து எழும்போது புன்னகை செய்ய வேண்டியதற்கான சில காரணங்கள்.

தினமும் விழித்து எழும்போது புன்னகை செய்ய வேண்டியதற்கான சில காரணங்கள்.

வேலைப்பளு, சிக்கல் மற்றும் கவலை காரணமாக, கடவுள் நமக்குத் தந்திருக்கும் அத்தனை பாக்கியங்களுக்கும் நன்றி சொல்ல நாம் மறந்து விடுகின்றோம். சிரமங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பதை விட்டு,நமக்குக் கிடைத்துள்ள எத்தனையோ பொக்கிஷங்களை எண்ணிப் பார்த்து வாழ்வை சந்தோசமாக்கிக் கொள்ளுங்கள்.

1.     இதைப் படிப்பதற்கு கண்கள் உள்ளதை எண்ணி நன்றியுடன் இருங்கள். எத்தனை பேர் நம்மை விட உடல் நலக் குறைவாக உள்ளார்கள்.

Ampicillin online justify;”>2.     புன்னகையுங்கள். ஏனென்றால் பள்ளி சென்று படிப்பதற்கும், பல விசயங்கள் கற்றுக் கொள்வதற்கும், நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கும் வாய்ப்புக்கள் கிடைத்தவர்களில் நீங்களும் ஒருவர்.

3.     விழித்துக் கொண்டதை எண்ணி சந்தோசம் கொள்ளுங்கள். நல்லவைகளை செயல் படுத்த்துவதற்கு இன்று மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

4.     உங்கள் மீது அன்பு செலுத்துவோரை அரவணையுங்கள். தினமும் உங்களைப் பற்றிய சிந்திப்பதற்கு ஒருவர் அங்கு உள்ளார்.

5.     எத்தனையை பேர் மேற் கூறையின்றி மழையில் நனையும் போது, உங்களது பாதுகாப்பான இருப்பிடத்தை எண்ணி  தினமும் காலையில் இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.

6.     நல்ல விசயங்கள், சந்தோசமான நேரங்கள், உங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம் போன்றவைகளை ஞாபகம் கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உள்ளதை எண்ணி புன்னகையுங்கள்.

7.     சுத்தமான தண்ணீர், ஆரோக்கியமான உணவு, அமைதியான சூழல் போன்றவைகளுக்கு இறைவனுக்கு நன்றி கூறுங்கள். எங்கு எந்த நிலையில் இருந்தாலும் அதைவிட மோசமான நிலையில் பலர் உள்ளதை எண்ணிப்பாருஙகள்.

8.     மின்சாரம்.  அதன் பலன்கள். மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

9.     சுதந்திரம். அதன் மூலம் உங்கள் இஷ்டம் போல் உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமை. சந்தோசமாக அனுபவியுங்கள்

10.  புன்னகையுங்கள். ஏனென்றால் நீங்கள் விடும் ஒவ்வொரு துளி கண்ணீர், அனுபவிக்கும் ஒவ்வொரு வலிகள், ஒவ்வொரு இதயத்துடிப்புக்கள்  ஆகியவற்றின் பின்னும் இறைவன் நல்லதோர் திட்டம் வைத்துள்ளான்.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment