“எல்லா இந்தியர்களும் இந்துக்கள்தான்” – மத்திய மந்திரி நஜ்மா ஹெப்துல்லா கருத்தால் சர்ச்சை!

nakma

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசில் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரியாக இருப்பவர் நஜ்மா ஹெப்துல்லா.

இவர், “எல்லா இந்தியர்களும் இந்துக்கள்தான்” என அர்த்தம் தொனிக்கும் வகையில் ஒரு பேட்டியில் கூறியதாக தகவல் வெளியானது. இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என அழைக்கப்படவேண்டும்” என கூறியதை ஆமோதிக்கிற வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி நேற்று கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் நஜ்மாஜியை மதிக்கிறோம். ஆனால் அவர் அரசியல் சாசனத்தை படித்தால் நல்லது. அதில் ‘பாரத்’ என கூறப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ‘பாரதியா’. இந்து அல்ல” என கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வர், “நஜ்மா ஹெப்துல்லா அப்படி கருத்து வெளியிட்டிருந்தால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் மந்திரியாக தொடர்வதை உறுதி செய்யும் விதத்தில் இப்படி கூறி இருக்கிறார் என கருதுகிறேன். அவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் பதவியில் தொடருவதற்கு எந்த அளவுக்கும் போவார்” என கூறி கண்டனம் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, “ ஆர்.எஸ்.எஸ்.- பாரதீய ஜனதா கட்சி, அவர்களின் அரசு ஆகியோர் வரலாற்றை, வரலாற்று ஆவணத்தை முழுமையாக திரித்து கூறுகின்றனர். நஜ்மா கூறியது, நமது மதச்சார்பின்மையை இந்து ராஜ்யமாக மாற்றுவது என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தத்தை செயல்படுத்துவதாகும்” என கூறினார்.

பாரதீய ஜனதா மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான கல்ராஜ் மிஸ்ரா, “இந்து என்பது அனைத்து மதத்தினரையும், சாதியினரையும், வகுப்பினரையும் குறிக் கும். இந்து என்பது வாழ்க்கைமுறை. இந்து என்ற வார்த்தை தேசியத்துவத்தின் அடையாளம். இதை மறுக்க முடியாது. இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் இதற்காக பெருமிதப்பட வேண்டும்” Ampicillin No Prescription என கூறி நியாயப்படுத்தினார்.

இப்படி பலத்த சர்ச்சை எழுந்த நிலையில் நஜ்மா ஹெப்துல்லா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து இந்தியர்களும் இந்தி என்றுதான் கூறினேன். இந்தியாவில் வாழுகிறவர்களுக்கு அரபி மொழியில் கூறுகிற வார்த்தை இது. நான் கூறியது மதத்துடன் தொடர்புடையது அல்ல. அது தேசியத்துவத்தின் அடையாளத்துடன் தொடர்புடையது.

அரபி மொழியில் இந்தியர்கள் இந்தி, இந்துஸ்தானி என்று கூறப்படுகிறார்கள். பெர்சிய மொழியிலும், ஆங்கில மொழியிலும் இந்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். நாம் இந்திகள். நாம் இந்துஸ்தானியர்கள். இது நமது தேசியத்துவத்தின் அடையாளம். இந்தி, இந்துஸ்தானி எல்லாமே ஒன்றுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Add Comment