ஃபீல் பண்றாங்களாமாம்!

p54

ஃபீல் பண்றாங்களாமாம்!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போட்டி நிகழ்ச்சிகளில் எலிமினேஷன் என்று வரும்போது அந்த நடுவர்கள் போடுற சீன் இருக்கே… அப்பப்பப்பா! நடிகர் திலகம், நடிகையர் திலகமெல்லாம் தோத்துப்போவாங்க. அதுக்கு சோகமான வயலின் இசையை ஓடவிட்டு இன்னும் எமோஷனல் ஆக்கிடுவாங்க. இப்போ இது எல்லோருக்கும் பழகிட்டதால, பார்வையாளர்கள் ‘டேக் இட் ஈஸி’ ஆகிட்டாங்க. எனவே அவர்களை சோகத்தில் சிக்கி சின்னாபின்னப்படுத்தி டி.ஆர்.பியை எகிறவைக்க வேறு சில புது

ஐடியாக்கள் இதோ…

அருமையாக பெர்ஃபார்ம் பண்ணுபவர்களை தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து வந்து நடுவர்கள் பாராட்டுவது போல, எலிமினேஷன் ஆன சோகத்தையும் இருக்கையிலிருந்து எழுந்து வந்து மேடையில் உருண்டு புரண்டு அழுது வெளிப்படுத்தலாம்!

யாரை எலிமினேஷன் செய்வார்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து இருப்பதால், எலிமினேட் செய்யப்பட்டவர் சார்பாக அவரது உறவினர்கள் பலரும் வந்து அந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து கலாட்டா செய்வது போன்றும் அத்தகைய மிரட்டல்களையும் மீறி தங்களது நடுநிலையை செயல்படுத்துவதாகக் காட்டலாம்!

எலிமினேஷன் நடந்த மறுநாள் முழுவதும் அந்தப் பங்கேற்பாளர் எப்படியெல்லாம் பல் விளக்குவது, சாப்பிடுவது என அனைத்து தினசரி செயல்பாடுகளையும் சோகமயமாகச் செய்கிறார் என்பதாகக் காட்ட வேண்டும். முடிந்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவரைக் காப்பாற்றுவது போலவும் காட்டலாம். நமக்கு டி.ஆர்.பி தானே முக்கியம்!

எலிமினேஷன் ஆன பங்கேற்பாளர் படித்துவரும் கல்வி நிலையமே சோகத்தில் மூழ்குவதாகவும், அதனால் கல்வி நிலையத்திற்கு கால வரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாகவும் காட்ட வேண்டும். தலைமையாசிரியர், வகுப்பாசிரியர் தொடங்கி உடன் பயிலும் மாணவர்கள் வரை அனைவரிடமும் பேட்டியெடுத்து சோகத்தைப் பிழிய வேண்டும்!

எலிமினேஷன் செய்ததை எதிர்த்து யாராவது ஒருவரை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரச் செய்யலாம். அவர் அந்த நிகழ்ச்சியின் தீவிரமான ரசிகர் என்று கோர்ட் வாசலிலேயே அளிக்கும் பேட்டியில் மறக்காமல் குறிப்பிட வேண்டும்!

எலிமினேஷன் ஆன பங்கேற்பாளரின் சோகத்தில் பங்கெடுப்பதற்காக பிரபல நடிகர் யாரேனும் அந்தப் பங்கேற்பாளரின் வீட்டிற்கே சென்று அவரை குஷிப்படுத்த எண்ணற்ற பரிசுப் பொருட்களை வழங்கி ஆறுதல் சொன்னதாகவும் காட்டலாம். இதனால் இரு தரப்புக்குமே விளம்பரம் அருமையாக அமையும்!

Buy cheap Cialis style=”text-align: justify;”>ரெடியா?

விகடன்

Comments

comments

Add Comment