அமெரிக்க ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் இந்திய அமெரிக்கரை இனரீதியாக விமர்சித்த எம்.பி.

அமெரிக்காவின் மாநில ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் இந்திய அமெரிக்கர் Buy Ampicillin ஒருவரை அமெரிக்க எம்.பி. ஒருவர் இனரீதியான கருத்துகள் மூலம் விமர்சித்துள்ளார்.

குடியரசுக்கட்சி சார்பில் தென்கரோலினா மாநிலத்தின் ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் நிக்கி கலேயே இவ்வாறு விமர்சிக்கப்பட்டுள்ளார்.

நிக்கி கலேயை இனரீதியான கருத்துகளால் விமர்சித்த மற்றொரு குடியரசுக் கட்சியின் உறுப்பினரான செனட்டர் ஜேக் க்னொட்ஸ், இணையத்தளத்தில் நடத்திய அரசியல் கருத்துப் பரிமாற்றம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவையும் விமர்சித்தவராவார்.

நிக்கி கலே(வயது 32) இரண்டு பிள்ளைகளின் தாயார்.நிக்கி இந்தியாவின் சீக்கிய குடும்பமொன்றில் பிறந்திருந்தாலும் தன்னை கிறிஸ்தவரென கூறிக்கொள்வார்.

இந்நிலையில்,ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் நிக்கி கலேயை தலையில் உடை அணியும் இனத்தவரென விமர்சித்துள்ள க்னொட் வெள்ளை மாளிகையில் ஏற்கனவே ஒரு சீக்கியர் உள்ளதாகவும் இந்நிலையில் இன்னொருவர் தேவையில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நிக்கியின் குடும்பத்தினரின் குறிப்பாக அவரது தாய் தந்தையர்கள் பற்றியும் க்னொட் விமர்சித்துள்ளார். ஆனால், தான் பிரச்சார உற்சாகத்தில் தான் அவ்வாறு கூறியதாக செனட்டர் க்னொட் தற்பொழுது கூறுவதுடன், அத்துடன், மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறே இதற்கு காரணம். தான் மன்னிப்புக் கோருவதாகவும் செனட்டர் க்னொட் தெரிவித்துள்ளார்.

Add Comment