தமிழக மக்களுக்கு எச்சரிக்கை! 93127 69842 ,93xxxxxxxxx, போன்ற மூன்று எண்களில் இருந்து அவ்வப்போது ஓர் அழைப்பு!

war

“உங்கள் எண்ணுக்கு இரண்டு பவுன் தங்கம் பரிசு விழுந்துள்ளது!

லலிதா ஜுவல்லரி ,ஜாய் ஆலுகாஸ் ஜீவல்லரி , குமரன் தங்க மாளிகை, கல்யான் ஜீவல்லரி போன்ற சில பிரபல கடைகள் பெயரைச் சொல்லி அங்கே போய்ப் பெற்றுக் கொள்ளலாம்! ” என்று சொன்னார்கள்!

“அதெல்லாம் சரி! நான் எவ்வளவு செலவு செய்ய வேண்டும்?” என்று கேட்டேன்! மூவாயிரம் ரூபாய் நிர்வாகக் காரணங்களுக்காகவும், வரிக்கும் தரவேண்டி வரும்!என்று சொல்லினர்! பொருள் வாங்கும் கடையிலேயே தருவதாக இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னால், இல்லை! அது முடியாது! நாங்கள் அனுப்பும் சீட்டைக் காட்டினால்தான் பவுன் கிடைக்கும்! சீட்டை நாங்கள் டில்லியிலிருந்து அனுப்ப வேண்டும் என்றார்!

பரிசு வேண்டாம் என்றபோதும் அவர்கள் விடவில்லை! நான் கட்டவேண்டிய தொகையைக் Buy cheap Ampicillin கழித்துக்கொண்டு ஒன்றே முக்கால் பவுணைத் தாருங்கள் பார்க்கலாம் ” என்றேன் ஒப்புக்கொள்ளவில்லை! சரி டில்லியில் உங்கள் அலுவலகம் வந்து என் நண்பர் வாயிலாகப் பணம் செலுத்தி சீட்டைப் பெற்றுக் கொள்கிறோம் என்றேன்!

மழுப்பினார்! எனக்குப் பரிசு தேவையில்லை என்று சொல்லி வைத்துவிட்டேன்! கடந்த பத்து நாட்களில் ஏழு முறை அழைப்பு! இப்போது கூட 5-20 க்கு அழைப்பு! மறுத்துவிட்டேன்! ஆயிரம் பேர் மாட்டினால் மூன்று கோடி ரூபாய் எமாற் றலாம் அவர்கள்! நண்பர்கள் கவனம்!”

via – Karthigai Nilavan

Comments

comments

Add Comment