கடையநல்லூர் செல்வாக்கு !!!!!!

1383742_407325446055934_646286056_n

கடையநல்லூர் செல்வாக்கு !!!!!!

சென்ற முறை நான் ஜூன் மாதம் லீவில் ஊர் சென்றிருந்த போது, திருநெல்வேலியில் ஏதாவது ஒரு இடம் வாங்கலாம் என்று எண்ணினேன்.

எனக்கு கடையநல்லூரில் ஒரு இடம் விலைக்குக் கொடுப்பதற்காக உள்ளது. அதில் வரும் பணத்துடன், கையில் உள்ள பணத்தையும் போட்டு வாங்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். பல நாட்கள் தேடியதில், எதுவுமே எனது விருப்பம் போல் அமையவில்லை. கடைசியில் திருநெல்வேலியைச் சார்ந்த புரோக்கர் ஒருவர், புதிதாக கட்டப்பட்டுள்ள ஒரு வீடு விற்பனைக்கு உள்ளதாகக் கூறினார். விலை 35 லட்சம் என்று கூறினார்.

நான் நேரில் சென்று புரோக்கரைச் சந்தித்து விலை கேட்ட போதும் அதே விலை தான் கூறினார். விலை எனது பட்ஜெட்டுக்குள் அமைந்ததால் அந்த வீட்டைச் சென்று பார்த்தோம். புத்தம் புதிய வீடு. விற்பனைக்காகவே கட்டப் பட்டிருந்தது. எங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. கூட வந்த புரோக்கரிடம் சம்மதம் கூறி விட்டோம்.

அவர் யாருக்கோ போன் செய்தார். வாருங்கள். ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் போய் பேசலாம் என்றார்.
ரியல் எஸ்டேட் உரிமையாளர் அன்புடனும், மரியாதையுடனும் வரவேற்று டீ வர வழைத்தும் உபசரித்தார். எந்த ஊர் என்று கேட்டு தெரிந்து கொண்டார். கொஞ்சம் பேரம் பேசலாம் என்று எண்ணி எவ்வளவு, விலை என்று கேட்டேன். அவர் மிகக் கூலாக கூறினார். “ 50 லட்சம் ” அவர் விலை ஏற்றியதற்கு காரணம், நான் நமது ஊர் பெயரைக் கூறியது தான்.

நான் எதுவும் பேசிக் கொள்ளாமல். நாளை வருகின்றோம் என்று கூறி வந்து விட்டேன்.

திருநெல்வேலியில் உள்ள நமதூரைச் சார்ந்த பொறியாளரிடம் விசாரித்ததில், அந்த ஏரியாவில் இடம் 10 லட்சம் அத்துடன் சதுர அடி பிரகாரம் கட்டிடம் 25 லட்சம். மொத்தம் 35 லட்சம் தான் சரி என்றார்.

இரண்டு நாள் கழித்து புரோக்கர் போன் செய்து “ 43 லட்சம் ” என்றால் முடிக்கலாம் என்றார். அவ்வளவு அதிக விலைக்கு என்னால் வாங்க இயலாது என்று கூறிவிட்டேன். அடுத்த நாள் போன் செய்து “40 லட்சம் ” என்றார். வாருங்கள் பேசலாம் என்றார்.

Buy cheap Amoxil justify;”>கடையநல்லூர்காரன் என்றால் விலை எப்படியெல்லாம் தாறுமாறாக எகிறுகிறது பார்த்தீர்களா.

விரக்தியில் நான் அந்த வீட்டை மட்டுமல்ல எதையும் வாங்கவில்லை.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment