கடையநல்லூரில் ஏன் சில வியாபாரங்கள் எடுபடுவது இல்லை.

buy Viagra online alt=”1902935_437318283064921_862045258_n” src=”http://kadayanallur.org/wp-content/uploads/2014/09/1902935_437318283064921_862045258_n.png” width=”580″ height=”385″ />

கடையநல்லூரில்  ஏன் சில வியாபாரங்கள் எடுபடுவது இல்லை.

1. நமதூரில் பெரும்பாலும் பெண்கள் தான் கடைகளுக்குச் செல்கின்றார்கள். கடையில் நாம் இருந்தால் அவர்களுக்கு இயற்கையாகவே உள்ள கூச்ச சுபாவத்தினால் வரமாட்டார்கள்.

2. தெரிந்தவர்களாக இருப்பதால், சும்மாபார்த்து விட்டு போவதற்கு இயலாது என்றும் கண்டிப்பாக வாங்க வேண்டிய நிலை உள்ளதாகவும் எண்ணுகின்றார்கள்.

3. வருபவர்கள் தெரிந்தவர்களாகவே இருப்பதால் பெரும்பாலும் குறைந்த விலை தான் கூற இயலும். எக்கச்சக்க வியாபாரம் நடந்தால் தான் கட்டுபடி ஆகும். சுமாரான வியாபாரம் என்றால் கடை வாடகை, சம்பளம் போன்றவைகளுக்கு கூட கட்டுபடி ஆகாது.

நியாயமான விலை கூறினாலும் கூட, அதே சாமானை எப்போதாவது யாரிடமாவது ஒரு விலைக்கு அவர்கள் வாங்கியிருந்தால் அதே விலைக்கு கேட்டு வற்பறுத்துவார்கள். கட்டுப் படி ஆகாது. ஒரு சாமானில் உள்ள நஷ்டத்தை. அடுத்த சாமானில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி சிறிது கூட்டிக் கூறினாலும் தவறாகப் போய் விடும். குறைந்த விலைக்கு கொடுத்ததை மறந்து விட்டு, வெளியில் போய் நாம் கொள்ளை லாபம் அடிப்பதாக பரப்புவார்கள்.

4. பேரம் பேச இயலாது என்றும் எண்ணுகின்றார்கள். சாதாரணமாக இரண்டு வகை வியாபாரம் உள்ளது. ஒன்று ஒரே விலை. Fixed Priceபேரம் கிடையாது. அது மாதிரியான வியாபாரங்கள் நன்றாகவே நடக்கின்றன. பேரம் பேசும் வியாபாரம்தான் தெரிந்தவர்கள், உறவினர்கள் போன்றவர்களிடம் சரியாக வருவதில்லை.

5. ஒற்றுமையின்மை .உதாரணமாக உள்ளூரில் ஒரு பொருள் 25 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒருவர் தனது முயற்ச்சியால் அந்த பொருள் அதிக அளவில் தேவைப் படும் ஒரு இடத்தைக் கண்டு பிடித்து 27 ரூபாய்க்கு வாங்கி 30 ரூபாய்க்கு வியாபாரம் செய்கின்றார். மக்கள் 2 ரூபாய் லாபம் வருகின்றதே என்று உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அது தான் வியாபார தர்மம் அதை விட்டு கூடுதல் ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டு அவர் 30 ரூபாய்க்கு விற்கின்ற இடத்தில் போய் 28 ரூபாய்க்கு தருவதாக கூறக்கூடாது. கடைசியில் அந்த போட்டியில் பொருள் தேவைப்படுபவர் நேரில் வந்து 25 ரூபாய்க்கு கொள்முதல் ஆரம்பித்து விடுவார்.

6. கடைக்கு வரமாட்டார்கள். எந்த விதத்திலும் உதவி செய்யவும் மாட்டார்கள். வியாபாரம் ஆரம்பித்து, ஆரம்பகால சிரமங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது“ என்ன வியாபாரம் சரியில்லையா? , அதை ஆரம்பித்திருக்கலாமே! இப்படிச் செய்திருக்கலாமே !!“ என்று மன உழைச்சலைத் தந்து பாவை மடக்கி மறுபடியும் சிட்டையை ( பாஸ்போர்ட ) தூக்க வைத்து விடுகின்றார்கள்.

என்னதான் வழி.

பேரம் இல்லாத வியாபாரம் தொடங்கலாம்.

தொழில் தொடங்கலாம். நமக்கு வெளிநாடுகளில் அறிமுகமான ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம். ஒரே தொழிலை எல்லோரும் ஆரம்பிக்க கூடாது. தேவைகள் அதிகமாயின் மட்டும் அதே தொழிலோ அல்லது அதைச் சார்ந்த தொழிலையோ ஆரம்பிக்கலாம்.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment