கடையநல்லூர் வாசிகளுக்கான பதிவு

அஸ்ஸலாமு அலைக்கும்
கடையநல்லூர் வாசிகளுக்கான பதிவு

திருமணத்திற்கு அழைத்து விட்டு பின்பு விருந்துக்கு தனியாக அழைப்பது அவசியம் தானா?

நமது ஊரில் முன்பு திருமணங்கள் இரவு நேரத்தில் நடைபெற்றது அது இப்போது பகல் நேரமாக மாறிப்போனது
இரவு சாப்பாடு மதிய சாப்பாடாக மாறிப்போனது

சொந்த பந்தங்களுக்கு தாலாச் சோறு கொடுத்தது வாளிச் சோறாக மாறிப்போனது
சாப்பாடு சொல்ல ஒரு முறையும் கூப்பிட ஒரு முறையும் என்று இரண்டு தடவை அலைந்தது ஒரு முறையாக மாறிப்போனது

இப்படி சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது போல் திருமணம் நடைபெறும் வீட்டின் பிரதிநிதியே நேரடியாக திருமண பத்திரிக்கை கொடுத்து அழைப்பு விடுத்த பிறகும் திருமணம் நடைபெறும் நாள் அன்று சாப்பிடுவதற்காக வேண்டி நம் சொந்த பந்தங்களை அழைக்கும் முறை இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது என்னை பொறுத்தவரை இந்த பழக்கத்தையும் கை விடலாம் என்றே நினைக்கிறேன் ஏனென்றால்
நமது ஊர் இப்போது முன்பு போல் இல்லாமல் மிகவும் விரிவடைந்து விட்டது இது சாப்பிட கூப்பிட செல்பவர்களுக்கு மிகவும் சிரமமாகவே உள்ளது

நமது ஊர் இளைஞர்கள் Doxycycline No Prescription பெரும்பாலோர் வெளிநாட்டில் இருப்பதால் திருமணம் நடைபெறும் வீட்டினர் சாப்பிட கூப்பிட செல்ல ஆட்கள் இல்லாமல் திண்டாடுகிறார்கள்

இப்படிப்பட்ட சிரமங்கள் இருப்பதால் திருமண பத்திரிகையே விருந்து அழைப்பாகவும் ஏற்றுக் கொண்டு விருந்தில் கலந்து சிறப்பிக்கலாமே

இது எனது எண்ணம் உங்கள் எண்ணங்களையும் பதிவிடுங்களேன்

சேயன் இபுராஹீம்

Add Comment