சுவடுகள்

அப்போதெல்லாம் வருடம் Buy Amoxil ஒருமுறை
எங்கள் ஆற்றில் வெள்ளம் நிச்சயம்!
கரை புரண்டோடும் ஆற்று நீரில்
மரங்களெல்லாம் பூக்கள் உதிர்க்க,
அங்கே மலரும் எங்கள் உலகம்!

மீன் பிடிக்கத் தூண்டில்,
மரக்கிளை வீசி பந்தயம்,
கரையோரக் குளியல்,
கப்பலாகும் அரசிலைகள்,

வீடும் பசியும் மறந்திருப்போம்!
திட்டும் அடியும் மறக்கவில்லை!

ஆறு, ஏரி, கிணறு, வயல்வெளி…
தினம் ஒன்றாய் திட்டமிடுவோம்,
இருட்டும் வரை அங்கேயே வட்டமிடுவோம்,

இன்று!
எப்போதோ ஒரு நாள் மழையும் வருதாம்,
கரைகளை அது நனைத்துப் போகுதாம்,
விளையாட பிள்ளைகள் ஒருவரும் இல்லையாம்,
பிள்ளைகள் ஒருவருக்கும் விளையாட்டே இல்லையாம்,

மைதானமான ஏரியில் இனி,
மட்டைப் பந்து மட்டுமே சாத்தியமாம்,
விவசாய நிலமெல்லாம் இனி,
தொழிற்சாலை கட்ட உத்தியாம்,

வற்றிய ஆற்றில் ஒழுகும்
கண்ணீராய் அதன் சுவடுகள்!
சுற்றி அலைந்தும் தென்படவில்லை
தண்ணீரில் கரைந்தனவோ என் சுவடுகள்?

இனி எங்கனம் விட்டுச் செல்வேன்
அடுத்த தலைமுறைக்கான என் சுவடுகள்?

Add Comment