கடையநல்லூர் 19 – வது வார்டு SDPI வேட்பாளர் மனு தாக்கல்

buy Doxycycline online style=”text-decoration: underline;”>கடையநல்லூர்  – SDPI  வேட்பாளர் மனு தாக்கல்

     கடையநல்லூர் 19 – வது வார்டு இடைத்தேர்தல் வரும் 18 – ம் தேதி நடைபெற உள்ளது. இதில் SDPI – கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் முகம்மது ஹாலித் இன்று மனு தாக்கல் செய்தார்.

     முன்னதாக வேட்பாளரின் இல்லத்தில் ஒன்றுகூடிய SDPI கட்சியின் செயல் வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள், மாவட்டத் தலைவர் ஜாபர் அலி உஸ்மானி அவர்கள் தலைமையில் 19 – வது வார்டின் அனைத்து தெருக்களிலும் வாகன பேரணி நடத்தினர். மெயின் பஜார் வழியாக சென்ற பேரணி, நகர்மன்ற அலுவலகத்தில் நிறைவடைந்தது. பின்பு தேர்தல் அலுவலர் ஜின்னா அவர்களிடம் வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

     இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் யாசர்கான், பொது செயலாளர் ஹூஸைன், செயலாளர் ஹக்கீம், மாவட்ட பொருளாளரும்     29 –வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான கனி MC, தொகுதி தலைவர் மீரான், மற்றும் நகர, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியில் வேட்பாளர் முகம்மது ஹாலித் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

20140904_11393820140904_113958 20140904_115352 20140904_112722 20140904_113149 20140904_113538 20140904_113825 20140904_113828

Add Comment