கடையநல்லூர்‬ நகராட்சியில் 8 பேர் மனுதாக்கல்…

கடையநல்லூர்‬ நகராட்சியில் 8 பேர் மனுதாக்கல்…

கடையநல்லூர் நகராட்சியில் காலியாக இருந்த 2 நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு கடைசி நாளான நேற்று வரை மொத்தம் 8 பேர் மனு தாக்கல் செய்தனர்.

கடையநல்லூர் நகராட்சியில் 19வது வார்டு கவுன்சிலர் இப்ராகிம் 24வது கவுன்சிலர் கணபதி ஆகியோர் காலமானதால் காலியாக உள்ள அந்த பதவிக்கு வரும் 18ம்தேதி தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில் 19வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட அட்டை குள தெருவை சேர்ந்த சேக் உதுமான் (56) மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்றாக அதே தெருவை சேர்ந்த உதுமான் மைதீன் மனு தாக்கல் செய்தார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அட்டை குள தெருவை சேர்ந்த அப்துல் மஜீத் (57) மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்றாக சேகுதுமான் (60) மனு தாக்கல் செய்தார்.

எஸ்.டி.பி.ஐ சார்பாக buy Levitra online இந்த வார்டில் போட்டியிட கலந்தர் மஸ்தான் தெருவை சேர்ந்த செய்யது காலித் (36) மனு தாக்கல் செய்தார். இந்த வார்டில் மொத்தம் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

24வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட கட்டி விநாயகர் கோவில் தென்வடல் தெருவை சேர்ந்த கோமதிபாண்டி (48) மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்றாக கோட்டை மந்தை தெருவை சேர்ந்த மாடசாமி மனு தாக்கல் செய்தார். இதே வார்டில் சுயேச்சையாக போட்டியிட கட்டி விநாயகர் கோவில் தென்வடல் தெருவை சேர்ந்த ராமையா (59) மனு தாக்கல் செய்தார்.

Add Comment