அமைச்சருடன் மோதல்: சகாயம் இடமாற்றம்:

hqdefault0

அமைச்சருடன் மோதல்: சகாயம் இடமாற்றம்:

சென்னை:அமைச்சருடன் ஏற்பட்ட மோதலால், கோ – ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம், மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை திடீரென இடமாற்றம் செய்தது, ஊழியர்கள் மற்றும் நெசவாளர்களிடம், கடும் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

கோ – ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக, கடந்த 2012 ஜூன் மாதம், சகாயம் பொறுப்பேற்றார். அதுவரை நஷ்டத்தில் இயங்கி வந்த, கோ – ஆப்டெக்ஸ் நிறுவனத்தை மேம்படுத்த, சகாயம், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இதன் பயனாக, 2012 – 13ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.கோ – ஆப்டெக்ஸ் விற்பனை, 200 கோடியில் இருந்து, 300 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஆண்டு, 14 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. இதிலிருந்து ஒரு கோடியை, நெசவாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கினார். நெசவாளர்கள் புகைப்படத்தை, அவர்கள் நெய்த துணியில் இணைக்க நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில், தற்போது சகாயம் மாற்றப்பட்டு, இந்திய மருத்துவத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமாக, அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஏற்பட்ட மோதல் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, கோ – ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கூறியதாவது:

சென்னையில் உள்ள, கோ – ஆப் டெக்ஸ் தலைமை அலுவலகத்தில், தனக்கு அறை ஒதுக்கி தரும்படி, அமைச்சர் கேட்டார். ஆனால் சகாயம், அறை ஒதுக்க முன் வரவில்லை. கோபமடைந்த அமைச்சர், தனக்கு அறை ஒதுக்கும்படி, கைத்தறி துணி நுால் துறை செயலருக்கு, கடிதம் அனுப்பினார்.

அவரும், உடனே அறை ஒதுக்கும்படி, சகாயத்திற்கு உத்தரவிட்டார். அதற்கு சகாயம், ‘இதுவரை, அமைச்சருக்கு தனி அறை ஒதுக்கப்படவில்லை. மேலும், தற்போதுள்ள அமைச்சர், உள்ளூர் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அவருக்கு அறை ஒதுக்கினால், அங்கு கட்சிக்காரர்கள் திரள்வர். ஊழியர்கள் பணி பாதிக்கப்படும். எனவே, அமைச்சர் வரும்போது, என் அறையில் அமரலாம்’ என, பதில் அனுப்பினார்.

அடுத்து, கோ – ஆப்டெக்ஸ் மண்டல விற்பனை மேலாளர்கள், 11 பேருக்கு, கார் வாங்கி, முதல்வர் கையால் வழங்க வேண்டும் என, அமைச்சர் ஆசைப்பட்டார்.இதற்கும் சகாயம் எதிர்ப்பு தெரிவித்தார்.’முன்பு, 700 கிளைகள் இருந்தபோதே, மேலாளர்களுக்கு கார் கிடையாது; தற்போது, ஒவ்வொருவரும், 15 கிளைகளை மட்டும் கவனிக்கின்றனர். Buy Lasix Online No Prescription தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது தான், அவர்கள் அதிக இடங்களுக்கு செல்ல வேண்டி வரும். அப்போது, வாடகைக்கு கார் அமர்த்தினால் போதும். தேவையின்றி கார் வாங்கி, நிதியை வீணடிக்க வேண்டாம்’ எனக் கூறி, அமைச்சரின் கார் திட்டத்திற்கு, முற்றுப்புள்ளி வைத்தார்.

அடுத்து, கோ – ஆப்டெக்ஸ் ஊழியர்கள் இடமாற்றத்தில், அமைச்சர் தலையிட்டார். அதையும் சகாயம் ஏற்றுக் கொள்ளவில்லை.கள்ளக்குறிச்சியில், கோ – ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் சோமசுந்தரம் என்பவரை, ஆளும் கட்சியை சேர்ந்த, நகராட்சி தலைவர் மற்றும் அவரது ஆட்கள் தாக்கியது தொடர்பாக, போலீசில் புகார் செய்யும்படி, சகாயம் உத்தரவிட்டார்.
அதன்படி, அவர் புகார் செய்தார். ஆனால், போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இத்தகவலை, தலைமைச் செயலர், போலீஸ் டி.ஜி.பி., கவனத்திற்கு, சகாயம் கொண்டு சென்றார். இதுவும் அமைச்சருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சில தினங்களுக்கு முன், தீபாவளி விற்பனை குறித்து ஆலோசிப்பதற்காக, ஊழியர்கள் கூட்டத்திற்கு, சகாயம் ஏற்பாடு செய்தார். கடைசி நேரத்தில், அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், அந்த கூட்டத்திற்கு, அவர் செல்லவில்லை. அதில் கலந்து கொண்ட அமைச்சர், ‘எனக்கு அறை தர மறுக்கிறார். இங்கு நான் எப்படியும் அறை பெற்றே தீருவேன்’ என, ஊழியர்களிடம் சபதமிட்டுள்ளார்.இதன் தொடர்ச்சியாகத் தான், சகாயம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு நஷ்டம் இல்லை. கோ – ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கும், நெசவாளர்களுக்கும் தான் இழப்பு.இவ்வாறு, ஊழியர்கள் தெரிவித்தனர்.

சகாயத்திற்காக நடைமுறை மாற்றம்:தமிழக அரசு செயல்படுத்தும், இலவச வேட்டி – சேலை வழங்கும் திட்டத்திற்கு, நுால் கொள்முதல் செய்து, வேட்டி, சேலை தயாரிக்கும் திட்டத்தை, கோ – ஆப்டெக்ஸ் மேற்கொண்டு வந்தது.இலவச சேலை, 372 கிராம் எடை இருக்க வேண்டும் என, அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியாகி வந்த சேலைகளை, சகாயம் எடை போடும்படி கூறியுள்ளார்.
அப்போது, எடை குறைவாக இருந்த, 30 லட்சம் சேலைகளை நிறுத்தி விட்டார். அதன்பின், மேல்மட்ட தலையீடு காரணமாக, அந்த சேலைகள் வினியோகத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு நிதியாண்டில், கோ – ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படும், இலவச வேட்டி, சேலை கொள்முதல் திட்டப்பணி, கைத்தறி துணி நுால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

தினமலர்

Add Comment