சவூதியில் வீட்டுப் பணிப் பெண்கள் ஏன் ஓடிப் போகின்றார்கள்.

சவூதியில் வீட்டுப் பணிப் பெண்கள் ஏன் ஓடிப் போகின்றார்கள்.

சவூதியில் வீட்டுப் பணிப் பெண்களில், சிலர் அதிகமான வேலைப் பளுவின் காரணமாகவும், கீழ்த்தரமாக நடத்தப் படுவதாலும் ஸ்பான்ஸரிடமிருந்து ஓடிப் போகின்றார்கள்.

buy Ampicillin online style=”text-align: justify;”>இவ்வாறு ஸ்பான்ஸரிடமிருந்து ஓடிய வீட்டுப் பணிப் பெண்களுக்கு பெரும்பாலும் டிரைவராக வேலை செய்யும் வெளிநாட்டினர்கள் சிலர் அடைக்கலம் கொடுத்து வைத்துள்ளார்கள். தாங்கள் போகும் இடங்களில் வீட்டுப் வேலைக்காக பணிப் பெண் தேவைப் பட்டால், மணிக்கணக்கில் அதிக அளவில் சம்பளம் பேசி தங்களிடம் உள்ள பெண்களை வேலைக்கு அனுப்புகின்றனர். அதில் தங்களுக்கு உரிய லாபத்தை அவர்கள் எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஒரு பெங்காலி டிரைவர் தன்னிடம் உள்ள பணிப் பெண்களுக்கு தனது கமிஷன் எடுத்துக் கொண்டது போக சம்பளம் மாதம் 2500 ரியால் கொடுப்பதாக கூறுகின்றார். சாதாரணமாக ஸ்பான்ஸரிடம் முழு நேரம் வேலை செய்து வரும் பணிப் பெண்களுக்கு 800 ரியால் முதல் 1500 ரியால் வரை தான் சம்பளம் கிடைக்கும்.

தனிப் பட்ட முறையில், குறைந்த நேரமே வேலை செய்து, அதிக சம்பளம் பெறும் ஸ்பான்ஸரிடமிருந்து ஓடிப் போன வீட்டுப் பணிப் பெண்களைப் பார்த்து ஏற்படும் ஆசையினால், ஸ்பான்ஸரிடம் வீட்டுப் பணிப் பெண்களாக வேலை செய்யும் சிலரும் ஓடிப் போக ஆசைப்டுகின்றார்கள்.

ஓடிப்போய் சட்ட விரோதமானவர்களிடம் தஞ்சம் அடையும் பெண்களுக்கு, பணம் அதிகமாக கிடைத்தாலும், சரியான பாதுகாப்பு கிடையாது. இது சட்ட விரோதமும் ஆகும்.

.தி.ரஹ்மத்துல்லா

Add Comment