சவூதியில் இயக்கங்கள் சார்பாக கூடுவது வேண்டாம்.

image0032Doxycycline online width=”376″ height=”282″ />

சவூதியில் இயக்கங்கள் சார்பாக கூடுவது வேண்டாம்.

சவூதி அரேபியா கிழக்கு மாகாணத்தில் உள்ள கப்ஜி என்னும் ஊரில் ஒரு இந்தியரின் வீட்டின் நடைமுறையில் சந்தேகம் கொண்ட ஒரு சவூதி பிரஜை, அது சம்பந்தமாக Commission for the Promotion of Virtue and Prevention of Vice (Haia) விற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் Haia குழுவினர் அந்த வீட்டை கண்காணித்து வந்துள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமை அன்று நிறைய ஆட்கள் அந்த வீட்டிற்கு வந்துள்ளார்கள். உடன் Haia குழுவினர் போலீஸுக்கு தகவல் கொடுத்ததின் பேரில், அந்த வீட்டிலிருந்து ஜெப பாடல்களில் ஈடுபட்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 27 பேர் கைது செய்யப் பட்டுள்ளார்கள். மேற்கொண்டு விபரங்கள் தெரிவிக்கப் படவில்லை.

நம்மில் பலர் இயக்கங்களின் சார்பாக ஆங்காங்கே கூடுகின்றார்கள். இது சவூதி அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப் பட்டதல்ல. தாவா சென்டர் அனுமதி பெற்று பள்ளிவாசல்களில் வைத்து நடைபெறும் கூட்டங்களில் மட்டுமே கலந்து கொள்ளவும். தனிப்பட்ட இடங்களில் தாவா சென்டர் அனுமதியின்றி கூட்டங்கள் எதுவும் நடத்த வேண்டாம்.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment