சிலர் மட்டும் எப்படி வேலையில் சீக்கிரம் முன்னேறுகின்றார்கள். CV யில் குறிப்பிடாத10 விசயங்கள்.

சிலர் மட்டும் எப்படி வேலையில் சீக்கிரம் முன்னேறுகின்றார்கள். CV யில் குறிப்பிடாத10 விசயங்கள்.

1.    பேசும் திறன்.

கெட்டிக்காரராகவும், புத்திசாலியாகவும் மட்டும் இருந்தால் போதாது, அதை மற்றவர்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லும் திறமையும் மிகவும் அவசியம்.

2.    பலரால் விருபம்பப் படுதல்.

நல்ல மனம் கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது. மற்றவர்கள் நம்மை விரும்பும் படியும் நடந்து கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள குறைகளை நமக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டுத் தெரிந்து திருத்திக் கொள்ள வேண்டும்.

3.    கவர்தல்.

உடம்பை அளவுடன் வைத்திருங்கள். முடி, நகம் கத்தரியுங்கள். தினமும் குளித்து சுத்தமாக இருங்கள் பொருத்தமான ஆடை களை அணியுங்கள்.

4.    தொடர்பு.

எக்கச்சக்கமான ஆட்களுடன் பழக்கம் வைத்துக் கொள்வதால் சரியான பலன் கிடைக்காது. தினசரி வாழ்வில் பலர் நமக்கு அறிமுகம் ஆவார்கள். அவர்களில் சிலர், உங்களுக்கு வியாபாரத்தில் உதவலாம், ஆலோசகராகலாம் நண்பர்களாகவும் ஆகலாம். அவர்களில் யாருடன் எந்த அளவிலான தொடர்பு வைத்துக் கொள்வது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

5.    சின்னஞ்சிறு வேலைகளைத் தெரிந்து வைத்திருத்தல்.

கம்ப்யூட்டர், பிரிண்டர், மொபைல் போன்றவற்றில் சிறிது தெரிந்து வைத்துக் கொண்டால்,உங்களது மேலதிகாரி I T  டிபார்ட்மெண்ட்  நபரை அழைத்து உதவியை நாடுமுன், நீங்கள் உதவலாம்.  சின்னப் பிரச்சினைகளுக்கு உங்களது அலுவலகத்தில் எல்லோரும் உங்களை நாடும் படி செய்யலாம்.

6.    சீராக அமைத்தல்

புத்தியில்லாத அல்லது மறதியுடன் கூடியவர்களை யாரும் விரும்புவதில்லை. நம்பகமான, எவை எங்கே உள்ளது என்பதை அறிந்த, திட்டமிடுவதற்கு தெரிந்தவர்களையே விரும்புவார்கள். எல்லோருமே சில திறமைகளுடன் தான் பிறக்கின்றார்கள். ஆதலால் குறைந்த பட்சம் தான் வேலை செய்யும் இடத்தையாவது சுத்தமாக வைத்துக் கொள்ள ஆரம்பிப்போம்.

7.    உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்துங்கள்

மற்றவர்களிடம் பேசும் போதும் அல்லது விசாரண செய்யும் போது Buy cheap Bactrim உங்களது உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

8.    மனோதைரியம்.

நல்லவர், கெட்டவர் என எத்தனையோ வகை தலைவர்களைப் பார்த்துள்ளோம் ஆயினும் அவர்களுக்குள் காணும் ஒரே ஒற்றுமை மனோதைரியம் தான். எதையுமே தலைமை தாங்கி  முன் நின்று நடத்தும் மனோதைரியத்துடன் இருங்கள்.

 

9.    கடமை உணர்ச்சி

வெற்றிக்கு தேவை கெட்டிக்காரத்தனம், கடின உழைப்பு, சந்தர்ப்பங்கள். ஆனால் எல்லாவற்றையும் விட பொறுப்புணர்ச்சி மிகவும் முக்கியம். சிலர் மாலையிலும் அதிக நேரம் ஆபீஸில் தங்குவது, பகலில் சரியாக வேலை செய்யாததினால் அல்ல. அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள பிராஜக்ட்டை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியே காரணம்.

10. எதையும் சீக்கிரம் கற்றுக் கொள்ளுதல்

உங்களுக்கு ஒதுக்கப் படும் எந்த ஒரு புதிய வேலையையும் ஒத்துக் கொள்ளுங்கள். தைரியமுடன் முயற்சி செய்யுங்கள்.  முதன் முறை தோல்வியுற்ற விசயமாக இருநதாலும், தவறுகளை  திருத்தி வெற்றி காணுங்கள். இதன் மூலம் நீங்கள் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்வார்கள். இது உங்களது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment