நல்லதோர் முஸ்லிம் சமுதாயம் காப்போம்

நல்லதோர் முஸ்லிம் சமுதாயம் காப்போம்

மனிதர்களை அவர்களது நம்பிக்கையை வைத்து யாரும் கணிப்பதில்லை, அவர்களது நடத்தைகளைக் கொண்டே கணிக்கப் படுகின்றார்கள்.

யார் முஸ்லிம்?

அல்லாஹ் ஒருவனே இறைவன், நபி முஹம்மது (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நம்பிக்கை கொணடவர்கள் முஸ்லிம்கள்.  இது தான் இஸ்லாம் ஒரு முஸ்லிமுடைய கைகள், நாவு இவைகளிலிருந்து எந்த மனிதர்களும்பாதிக்காமல் காக்கப் படவேண்டும். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளும் வாழ்வின் நெறி முறைகளையே போதிக்கிறது.

ஒருவர் மற்றவர்களுடன்  எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறையே. மதம் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். ஒவ்வொரு மனிதனும் சமுதாயம், பெற்றோர்கள், குழந்தைகள், மனைவி / கணவன், சுற்றுச்சூழல், உதவி தேவைப்படுவோர்ஆகியவற்றில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம்கற்றுத் தருகின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் மற்றவர்களிடத்தில் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும்.

கடந்த சில வருடங்களாக சில முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பெயரால் செய்யும் செயல்கள், இஸ்ஸாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் களங்கம் விளைவிப்பதாய் உள்ளது. இஸ்லாமிய இயக்கங்களுக்குள் உள்ள தகராறுகள் வருந்தத் தக்கது. ஏன் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசிக் கொள்வதை நிறுத்தக் கூடாது? துரதிர்டவசமாக இன்றைய இளைஞர்களிடையே இது பரவியுள்ளது கவலைப் பட வேண்டிய விசயம்.. நம்மிடையே உள்ள சிறிய பாகுபாடுகளை ஒதுக்கி விட்டு அமைதியாக ஒற்றுமையுடன் ஒரே சமுதாயமாக வாழ்வதற்கு ஏன் நாம் தயாராக இல்லை?

நமக்குள் கருத்துப் பரிமாற்றங்கள் இருக்கலாம். வீணே விவாதம் சரியல்ல. எது சரி எது தவறு என்று தீர்மானித்துக் கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆனால் யார் கூறுவது சரி யார் கூறுவது தவறு என்று கூறும் உரிமை நம்மில் யாருக்கும் கிடையாது. அவரவர்களது நன்மை, தீமைகளை no prescription online pharmacy ஆராய்ந்து தீர்ப்பளிப்பவன் அலாலாஹ் மட்டுமே

எல்லோருக்கும் குர்ஆன், ஹதீஸ் போன்றவைகளை படிக்கும் வாய்ப்பு உள்ளது. எல்லோருக்கும் அல்லாஹ் சிந்திக்கும் திறன் அளித்துள்ளான். இதில் யாரும் நான் புரிந்து கொண்டது தான் சரி என்று கூறிக்கொண்டு தனது தலைமையில் கூட்டம் சேர்க்க வேண்டியதில்லை. கூட்டம்சேர்த்து பதவிகளில இன்பம் காண்பவர்களை நிராகரிப்போம்.

எப்படி நல்லதோர் முஸ்லிமாக வாழ்வது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் கற்றுக் கொள்ள வேண்டும்.  அதன் மூலம் நல்லதோர் சமுதாயம் காப்போம்.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment