கடையநல்லூரில் மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற என்ஜினீயர்

கடையநல்லூர் ரஹ்மானியா புரத்தை சேர்ந்தவர் ஷேக்உதுமான் (வயது32). இவரது மனைவி அஜிதா (28). இவர்களுக்கு அபரா (10) என்ற மகள் உள்ளார்.

வெளிநாட்டில் என்ஜினீயராக ஷேக் உதுமான் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடு முறையில் ஷேக் உதுமான் சொந்த ஊருக்கு வந்தார்.

அப்போது கணவன் –மனைவி இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு ஏற்படும் போதெல்லாம் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் கணவன்–மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஷேக் உதுமான் மனைவியை சரமாரியாக அடித்து உதைத்து அவர் மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்தார்.

மேலும் வீட்டில் இருந்த சிலிண்டரையும் திறந்து விட்டார். உடலில் தீப்பிடித்த அஜிதா கதவை திறந்து தப்பிக்க முயன்றபோது ஷேக் உதுமான் மனைவியை வீட்டினுள் தள்ளி விட்டுள்ளார். இதனால் அவரும் படுகாயம் அடைந்தார்.
கணவன்–மனைவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கடையநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து கருகிய நிலையில் கிடந்த கணவன்–மனைவியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அஜிதா பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளை அரசு ஆஸ்பத்திரியில் ஷேக்உதுமான் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேக் உதுமான் சிலிண்டரையும் திறந்து விட்டதால் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனைவியை கணவன் உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Buy Amoxil alt=”10599403_685681938181960_449483206487377828_n” src=”http://kadayanallur.org/wp-content/uploads/2014/09/10599403_685681938181960_449483206487377828_n.jpg” width=”560″ height=”380″ /> 10703579_685681974848623_1351821668577466964_n 10696248_702023059876586_7569217175589864535_n 10675566_685681898181964_4261114437120287988_n

Add Comment