கடையநல்லூரில் புதியதோர் உதயம் ”பேட்டை முஸ்லிம் மாணவர் சங்கம்” (PISA)…

கடையநல்லூரில் புதியதோர் உதயம் ”பேட்டை முஸ்லிம் மாணவர் சங்கம்” (PISA)…

கடையநல்லூர் பேட்டை முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ”பேட்டை முஸ்லிம் மாணவர் சங்கம்” (PISA) துவக்க விழா நடந்தது.

துவக்க விழாவில், சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

துவக்க விழாவில், கடையநல்லூர் பேட்டை முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்காகவும், பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், இந்த சங்கம் ஏற்படுத்தப்படுகிறது.

இச்சங்கத்தை நிர்வகிப்பதற்காக முன்னாள் மாணவர்கள் அனைவரும் சந்தா தொகை வழங்க வேண்டும், முன்னாள் மாணவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை ”பேட்டை முஸ்லிம் மாணவர் சங்கம்” நிர்வாகிகள் நேரில் சந்தித்து, பள்ளி வளர்ச்சிக்கு பாடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மிகவும் ஏழ்மையான மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு அரசு தேர்வு கட்டணம் செலுத்துவது, பள்ளயில் உள்ள வகுப்பிற்கு பெஞ்சுகள் வசதி ஏற்பாடு செய்வது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

துவக்க விழாவில், சங்கத்தின் தலைவராக ”அரபியன்” நாகூர் மைதீன், செயலாளராக அபுதாகிர், பொருளாளராக ”A to Z” இல்லியாஸ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய உறுப்பினர்களாக சேர விரும்பும் நபர்கள் ”அரபியன்” நாகூர் மைதீன் – 9965039092, அபுதாகிர் – 7865105342, ”A to Z” இல்லியாஸ் – 9842516968 ஆகியோர் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், pisapettai@gmail.com என்ற இ-மெயில் முகவரிலும் தொடர்பு கொள்ளலாம்.

10452368_660853517323567_521936877589944901_n10518966_464788113658126_7744045221824272046_nBuy cheap Doxycycline width=”466″ height=”350″ />

10435028_339539339540405_6822429662291540253_n

Add Comment