உலக செம்மொழி மாநாட்டை முன்னிட்டு பாரபட்சமில்லாமல் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் பேரணி

உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் போது 7 ஆண்டுகள் தண்டனை முடிந்த ஆயுள் கைதிகளை பாரபட்சமில்லாமல் விடுவிக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோவையில் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஜுன் 4 அன்று மாபெரும் பேரணியை நடத்தியது.

இப்பேரணிக்கு மாநில தலைவர் M.முகமது அலி ஜின்னா அவர்கள் தலைமை தாங்கினார். இப்பேரணியில் மாநில துணை தலைவர் எ.எஸ் இஸ்மாயில், Buy cheap Cialis மாநில செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் அமீது, செய்யது இப்ராகிம், மாவட்ட தலைவர் ராஜா உஸைன் மற்றும் நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கில் பொது மக்களும் கலந்து கொண்டனர்.பேரணி சரியாக மாலை 4.00 மணிக்கு பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லுரியில் இருந்து துவங்கியது. பேரணி முடிவில் பொது கூட்டமும், இறுதியில் கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுக்கப்பட்டது.

Add Comment