ராணுவ வீரரை ‘ஷூ லேஸ்’ கட்ட வைத்து அவமரியாதை?: சர்ச்சையில் ராஜ்நாத் சிங்!

12-army-jawan-ties-rajnath-singh-s-shoe-laces-600buy Viagra online src=”http://kadayanallur.org/wp-content/uploads/2014/09/12-army-jawan-ties-rajnath-singh-s-shoe-laces-600.jpg” width=”600″ height=”450″ />

ராணுவ வீரரை ‘ஷூ லேஸ்’ கட்ட வைத்து அவமரியாதை செய்துவிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் சென்றிருந்தார்.

அப்போது, அவரது கால்களில் அணிந்திருந்த ஷூவின் லேஸ்கள் அவிழ்ந்துள்ளன. அதை தொடர்ந்து ராஜ்நாத் சிங்கின் ஷூ லேஸ்களை படை வீரர் ஒருவர் கட்டிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த வீடியோ கேமராவில் பதிவாகி இருக்கிறது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது ஷூ லேஸை கட்ட ராஜ்நாத் சிங் உத்தரவிட்டாரா?, அல்லது அந்த வீரரே தாமாக முன்வந்து ஷூ லேஸை கட்டிவிட்டாரா? என்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆனாலும், இந்த காட்சிகளுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருப்பதால், இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

Add Comment