புதிய தலைமுறையில் தவ்ஹித் ஜமாத் தலைவர் ஜைனுலாபுதின் அவர்களின் பேட்டியைப் பார்த்து மனது கனத்துப் போனது.

10620778_854781717867865_4600586502848176353_n

புதிய தலைமுறையில் தவ்ஹித் ஜமாத் தலைவர் ஜைனுலாபுதின் அவர்களின் பேட்டியைப் பார்த்து மனது கனத்துப் போனது.

ஒரு சமூகம் எப்படி தொடர்ச்சியான பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் தொடர்ந்து துரத்தப்படுகிறது . அதுவும் அவர்கள் எல்லாத் தியாகங்களையும் செய்து விடுதலைக்காகப் போராடிய சொந்த நாட்டில் .போராடாதவர்களின் பொய்ப்பிரச்சாரம் எவ்வளவு திட்டமிட்டு ஊடகங்களின் உதவியோடு பரப்பப்படுகிறது! ‘(முஸ்லிம் தீவிரவாதிகள்’என்று எழுதுவதை எப்போது நிறுத்துவோம் என்று தெரியவில்லை.)
நக்சல் இயக்கங்களில் சேருபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் . அதன் முன்னனித் தலைவர்களில் பலபேர் பிராமணர்கள் . அது அவர்கள் சொந்த நம்பிக்கை அவர்கள் போகிறார்கள். உடனே இந்துக்கள் எல்லாம் நக்சலைட்டுகள் என்றா சொல்கிறோம்?

இந்துமத சாமியார் என்று சொல்லிக் கொள்பவர்கள் குண்டுவைக்கிறார்கள் அதற்காக ஒரு சமூகத்தையே மொத்தமாக அப்படி முத்திரை குத்திவிட முடியுமா என்ன?
பிறகெப்படி அல்கொய்தாவும் ,இன்னபிற இயக்கங்களும் செய்கிற விசயங்களுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பொறுப்பாக முடியும் ?

சொந்த நாட்டில் அவர்களுக்கு வீடு கொடுக்க மாட்டோம் ,வேலை கொடுக்க மாட்டோம், அரசியலில் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கமாட்டோம் என்று சொன்னால் அவர்கள் வேறு எங்குதான் போகமுடியும் ?

மறைக்கப்பட்ட உண்மைகளை அனைவருக்கும் சொல்ல ஒரு மாத காலம் பிரச்சாரம் செய்யப்படும் என்று சொன்னார் . வரவேற்க வேண்டிய ஒன்று . தொடர்ந்து ஒரு தரப்பு பொய்களையே கேட்டுக்கொண்டிருப்பதை விட, இன்னொரு தரப்பு நியாயத்தையும் கேட்பதற்கு மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

Gunaa Gunasekaran கேள்விகள் சிறப்பாக இருந்தன .மிகவும் சீரியசான பேட்டியில் காதலுக்கும் ,எய்ட்சுக்குமான தொடர்பு கேள்வி சிரிக்கவைத்து விட்டது !

 Jothimani Sennimalai

 

தவ்ஹித் ஜமாத் தலைவர் ஜைனுலாபுதின் பங்குபெற்ற அக்னி பரிட்சை 5 பாகங்கள்
Buy Doxycycline href=”http://www.youtube.com/watch?v=8rBVrJ69ItI&list=UUmyKnNRH0wH-r8I-ceP-dsg” target=”_blank”>http://www.youtube.com/watch?v=8rBVrJ69ItI&list=UUmyKnNRH0wH-r8I-ceP-dsg

Add Comment